சென்னை: கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.இதேபால் மறுமார்க்கமாக சென்னையில் இருந்து கோவை போத்தனூருக்கு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. கோடைக்கால கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தாம்பரம் மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு செல்லும் இரண்டு ரயில்கள் மறுமார்க்கமாக கோவை போத்தனூரில் இருந்து புறப்பட்டு தாம்பரம் மற்றும் சென்னை சென்ட்ரல் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக பார்ப்போம்.
சென்னை சென்ட்ரல் டூ கோவை போத்தனூர் ரயில் நேர விவரம் இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:- “சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்படும் 06027 என்ற எண்ணுள்ள ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூர் ரயில் நிலையத்தை வந்தடைகிறது.
போத்தனூரில் இருந்து வருகிற 14-ந்தேதி இரவு 11.30 மணிக்கு புறப்படும் 06028 என்ற எண்ணுள்ள ரயில் மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடைகிறது. தாம்பரம் டூ கோவை போத்தனூர் ரயில் நேர விவரம் தாம்பரத்தில் இருந்து 06185 என்ற எண்ணுள்ள ரயில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு,செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பக்கோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக போத்தனூருக்கு மறுநாள் காலை 7.45 மணிக்கு வந்தடைகிறது.இந்த ரயில் மேமாதம் 2-ந்தேதிவரை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இயக்கப்படுகிறது. போத்தனூரில் இருந்து 06186 என்ற ரயில் ஞாயிறுதோறும் இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.15 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. வருகிற 13-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதிவரை இந்த ரயில் இயக்கப்படுகிறது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. Powered By
சென்னை – கொல்லம் சிறப்பு ரயில் நேர விவரம் இதுதவிர மேலும் சில சிறப்பு ரயில்களைஅறிவித்துள்ளது தெற்குரயில்வே அந்த ரயில்களின் நேர விவரத்தையும் இந்த பதிவில் பார்ப்போம். சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்.12, 19 ஆகிய தேதிகளில் இரவு 11.20 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06113) புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 3.30 மணிக்கு கொல்லத்தை சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து ஏப்.13, 20 ஆகிய தேதிகளில் வாராந்திர சிறப்பு ரயில் (06114) புறப்பட்டு, மறுநாள் முற்பகல் 11.10 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மங்களூர் சந்திப்பு- திருவனந்தபுரம் வடக்கு இடையே ஒரு சிறப்பு ரயிலும், திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே ஒரு சிறப்பு ரயிலும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அத்துடன் சென்னை சென்ட்ரல் – கொல்லம் இடையே சிறப்பு ரயில், தாம்பரம் – போத்தனூர் இடையே சிறப்பு ரயில், திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு ரயில் ஆகிய ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை (ஏப்.10) காலை 8 மணிக்கு தொடங்கியது. மற்ற 3 சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது.
Leave a Reply