கோவை: கோவை நீலாம்பூர் முதல் மதுக்கரை வரை 26 கி.மீ. தூரம் இருவழிப்பாதையாக உள்ளதால், அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது. பொதுமக்கள் வற்புறுத்தலை தொடர்ந்து இந்த சாலையை அகலப்படுத்த தேசிய நெடுஞ்சாலை துறை முன்னெடுத்துள்ளது. இந்த சாலை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு 4 வழிச்சாலையாகவோ, 6 வழிச்சாலையாகவோ விரிவாக்கம் செய்யப்படும். இந்த வழித்தடத்தில் உள்ள 6 சுங்கச்சாடிகள் அகற்றப்பட்டு, ஒரே சுங்கச்சாவடி அமைக்கப்பட வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவையில் உள்கட்டமைப்பு வசதிகள் மிகப்பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக கோவையை இணைக்கும் அனைத்து சாலைகளுமே நான்கு வழிச்சாலை மற்றும் ஆறு வழிச்சாலையாக மாறிவிட்டன. இதில் கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலை, ஆறு வழிச்சாலையாக மேம்பால வடிவில் கட்டப்பட்டது. இந்த சாலையை போல் சென்னை திருச்சி சாலை கூட கிடையாது. அதுமட்டுமல்ல.. கோவையின் நுழைவு வாயிலான நீலாம்பூர் தொடங்கி உக்கடம் வரை உயர்மட்ட பாலமும் அமைத்து வருகிறார்கள். இந்த பணியும் கிட்டத்தட்ட பாதிக்கு மேல் முடிந்துவிட்டது.
எல்.அண்டு.டி. நிறுவனம் அதேநேரம் கோவை மாநகருக்குள் நுழையாமல் நீலாம்பூரில் இருந்து, புறநகர் பகுதியான மதுக்கரை செல்லும் வகையில் 26 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ள இருவழிச்சாலை, எப்போதோ ஆறுவழிச்சாலையாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த சாலை இன்று வரை இருவழிச்சாலை என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த சாலையை எல்.அண்டு.டி. நிறுவனம் பராமரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் இந்த சாலை குறுகியதாக இருப்பதாலும், ஏராளமான வாகனங்கள் செல்வதாலும் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. ராவத்தூர், வெங்கிட்டாபுரம், ஈச்சனாரி, போடிபாளையம், நாச்சிபாளையம், சிந்தாமணி புதூர் பிரிவுகளில் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்று வருவதால் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை நீண்ட காலமாக இருக்கிறது. கோவை மக்களின் பல வருட கோரிக்கைக்கு அதிகாரிகள் செவி சாய்த்துள்ளனர். நீலாம்பூர் முதல் மதுக்கரை கோவை நீலாம்பூர் முதல் மதுக்கரை வரை 26 கி.மீ. தூரம் இருவழிப்பாதையாக உள்ளதால், அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது. பொதுமக்கள் வற்புறுத்தலை தொடர்ந்து இந்த சாலையை அகலப்படுத்த தேசிய நெடுஞ்சாலை துறையால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் சாலையை பராமரிக்கும் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த காலம் இன்னும் இருப்பதால் விரிவாக்கப் பணிகள் தாமதமாகி வந்தது. இந்த நிலையில் வருகிற ஜூன் மாதத்துக்கு பின்னர் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் இந்த சாலை வருகிறது.
ஆறு வழிச்சாலை இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, மத்திய அரசு தனியார் நிறுவனத்துக்கு நஷ்டஈடு வழங்கி இந்த சாலையில் 26 கி.மீ. தூரம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு இந்த சாலை 4 வழிச்சாலையாகவோ, 6 வழிச்சாலையாகவோ விரிவாக்கம் செய்யப்படும். சுங்கச்சாவடிகள் குறைகிறது இந்த வழித்தடத்தில் உள்ள 6 சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டு, ஒரே சுங்கச்சாவடி அமைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எல் அண்டு டி புறவழிச்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளை கையகப்படுத்த தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தில் இருந்து கடிதம் அளிக்கப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக வரும் ஜூன் மாதத்தில் இருந்து சுங்கச்சாவடி வசூல் பணி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நடவடிக்கைக்கு கோவை மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Leave a Reply