மியான்மர், தாய்லாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… உதவிக்கரம் நீட்டிய பிரதமர் மோடி..!

 நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு (Myanmar Earthquake)(இந்தியா நிவாரண பொருட்களை அனுப்பி உள்ளது.

தற்காலிக கூடாரம், போர்வை, குடிநீர், சூரிய ஒளி மின் விளக்கு, மருத்துகள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மியான்மருக்கு இந்தியா அனுப்பி உள்ளது. முன்னதாக 2025 மார்ச் 28ஆம் தேதி மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து கவலை தெரிவித்த மோடி, 2025 மார்ச் 29ஆம் தேதி இன்று நிவாரண பொருட்களை அனுப்பி இருக்கிறார்.2025 மார்ச் 28ஆம் தேதி மியான்மர் மற்றும் தாய்லாந்தில் பயங்கரமாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த உலக நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மியான்மர் மற்றும் தாய்லாந்த தலைநகர் பாங்காங்கில் பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. மியார்மரில் 7.7 ரிக்டர் அளவுகோலிலும், பாங்காங்கில் 6.7 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. வரலாற்றிலேயே இல்லாத வகையில் மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாவுக்கு பெயர்ப்போன தாய்லாந்தில் நிலநடுக்கம் உலுக்கி எடுத்தது. நிலநடுக்கத்தால் இரு நாடுகளுக்கு நிலைகுலைந்துள்ளது. தாய்லாந்து மற்றும் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரிய பெரிய கட்டிடங்கள் சரிந்து விழுந்துள்ளன. மேலும், மியான்மரின் மண்டலேயில் உள்ள புகழ்பெற்ற அவா பாலம் நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்தது. இதுபோன்ற இருநாடுகளிலும் சாலைகள் சேதம் அடைந்துள்ளன.