கோவை: கோவை மாவட்டம் அன்னூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக கடந்த 27 ஆண்டுகளாக செல்லனூர் புது காலனி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் பணியாற்றி வந்தார். தற்போது அவர் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பிரிவு உபசார விழா, அன்னூர் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் பரமேஸ்வரன் தலைமையில் நேற்று நடந்தது. பின்னர் மேள-தாளத்துடன் பேரூராட்சி தலைவர் பயன்படுத்தும் காரில் தூய்மை பணியாளர் ராஜேந்திரனை பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் அமர வைத்து வீட்டுக்கு வழி அனுப்பி வைத்தார்.
கோவை மாவட்டம் அன்னூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக கடந்த 27 ஆண்டுகளாக செல்லனூர் புது காலனி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் பணியாற்றி வந்தார். தற்போது அவர் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பிரிவு உபசார விழா, அன்னூர் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் பரமேஸ்வரன் தலைமையில் நேற்று நடந்தது.
விழாவில் துப்புரவு பணி மேற்கொண்டு நகரை தூய்மையாக வைத்திருக்க பணியாற்றிய ராஜேந்திரனுக்கு ஆள் உயர மாலை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் கேக் வெட்டி அவருக்கு அனைவரும் ஊட்டிவிட்டு நன்றி தெரிவித்தனர். பின்னர் மேள-தாளத்துடன் பேரூராட்சி தலைவர் பயன்படுத்தும் காரில் தூய்மை பணியாளர் ராஜேந்திரனை பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் அமர வைத்து வீட்டுக்கு வழி அனுப்பி வைத்தார். இதில் பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அன்னூரில் நடுரோட்டில் நின்ற லாரியால் பரபரப்பு கோவை மாவட்டதின் அன்னூர் நகரம் என்பது நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு என நான்கு மாவட்டத்திற்கு செல்லவும் முக்கியமான சந்திப்பு ஆகும். அதாவது மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூர் செல்லவும், கோவையில் இருந்து சத்தியமங்கலம் செல்லவும், கருமத்தப்பட்டி, சோமனூர் பல்லடம் செல்லவும், ஈரோடு செல்லவும் முக்கியமான சந்திப்பாக அன்னூர் இருக்கிறது.
கோவையை தவிர மற்ற மாவட்டத்தினர் அனைவருமே ஊட்டி செல்ல அன்னூர் கடந்து தான் போக வேண்டும். இதனால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த பகுதியை கடந்து செல்கின்றன. இதன் காரணமாக எப்போதுமே வாகன போக்குவரத்து அதிகளவில் இருக்கும். இந்தநிலையில் நேற்று அமாவாசை தினம் என்பதால் வழக்கத்தை விட கூடுதலாகவே வாகன போக்குவரத்து காணப்பட்டது. கருமத்தம்பட்டி பகுதியில் இருந்து கோவை செல்ல அன்னூர் வழியாக வந்த கண்டெய்னர் லாரி திடீரென நடுரோட்டில் பழுதாகி நின்றது. இதனால் சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, கோவை சாலை, அவினாசி சாலை என அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டனர். சுமார் 3 மணி நேரமாக லாரியில் பழுதை நீக்க முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். அதன்பிறகு லாரி பழுது நீக்கி எடுத்து செல்லப்பட்டது. அதன் பிறகே வாகன போக்குவரத்து சீரானது.
Leave a Reply