கோவை: மின்னணு பொருட்களை உற்பத்தி செய்வதில் தமிழ்நாடு புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. இதற்கிடையே செமி கண்டெக்டர் உற்பத்தி தொடர்பான கருவி நாட்டிலேயே முதல் முறையாக இப்போது கோவையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து முக்கிய நகரமாக விளங்குவது கோவை. ஒரு துறை என்று இல்லாமல் வேளாண்மை, ஐடி, தொழிற்துறை என்று பல்வேறு துறைகளிலும் முக்கிய இடத்தை கோவை பெற்றுள்ளது. குறிப்பாக தொழில்துறையில் தமிழ்நாட்டில் மிக முக்கிய இடத்தை கோவை பெற்றுள்ளது. நாட்டின் பல டாப் தொழில் நிறுவனங்களும் கோவையில் தான் இருக்கிறது.
கோவையில் சாதனை அப்படி கோவையைச் சேர்ந்த யீல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் இப்போது மிகப் பெரிய சாதனையைப் படைத்துள்ளது. உலகம் இப்போது மேலும் மேலும் தொழில்நுட்பத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியில் இப்போது செமி கண்டெக்டர்கள் மிக முக்கியமானதாக இருக்கிறது. நவீன தொழில்நுட்பத்தில் செமி கண்டெக்டர் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதேநேரம் செமி கண்டெக்டர்கள் என்பது மற்ற பாகங்களைப் போல இல்லை.. இது மிகவும் சிக்கலான ஒன்றாகும். தற்போது உலகின் செமி கண்டெக்டர்களில் பெரும்பகுதி சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்தே வருகிறது. அந்த நிலையை மாற்ற முக்கிய படியைத் தான் யீல்ட் நிறுவனம் வைத்துள்ளது.
செமி கண்டெக்டர் கருவி செமி கண்டெக்டர் உற்பத்தியில் VeroTherm Formic Acid Reflow என்ற கருவி முக்கியமானதாகும். இந்த அதிநவீன கருவியைத் தான் லீல்ட் நிறுவனம் வெற்றிகரமாக ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டிலேயே இந்த கருவியை ஏற்றுமதி செய்த முதல் நிறுவனம் என்ற சாதனையை லீல்ட் நிறுவனம் படைத்துள்ளது.
கோவை சூலூரில் லீல்ட் நிறுவனத்தின் உற்பத்தி மையம் அமைந்துள்ள நிலையில், அங்கிருந்து தான் இது ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. செமி கண்டெக்டர் துறையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மற்றும் முக்கிய உபகரணம் இதுவாகும். LLM எனப்படும் லார்ஜ் லெங்குவேஜ் மாடல் மற்றும் லாஜிக் சிப்களுக்கு இந்த கருவி முக்கியமானதாக இருக்கிறது.
ஏற்றுமதி வெற்றி இந்த லீல்ட் நிறுவனம் நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைந்துள்ளது. சர்வதேச அளவில் தனது நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய விரும்பிய லீல்ட் அதன் புதிய உற்பத்தி மையத்தை சூலூரில் தொடங்கியது. கடந்த 2024 செப்டம்பர் மாதம் முதல் சூலூரில் அதன் உற்பத்தி மையம் செயல்பட்டு வருகிறது. முதலில் இந்த VeroTherm Formic Acid Reflow கருவியின் மாடல் கடந்தாண்டு இறுதியில் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது.
டிஆர்பி ராஜா பெருமிதம் இது குறித்து தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறுகையில், “சூலூர் உற்பத்தி மையத்தில் இருந்து முதல்முறையாகச் செமி கண்டெக்டர் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு நாங்கள் புதிய செமி கண்டெக்டர் கொள்கையை அறிவித்த நிலையில், அதன் வெற்றியையே இது காட்டுகிறது. செமி கண்டெக்டர் துறையில் சர்வதேச மையமாக இருக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு உறுதியாக உள்ளது. இதற்காகவே ₹500 கோடி மதிப்பில் செமி கண்டெக்டர் திட்டத்தின் கீழ் சூலூர் மற்றும் பல்லடத்தில் செமி கண்டெக்டர் உற்பத்தி பூங்காக்களை அறிவித்துள்ளோம்” என்றார்.
Leave a Reply