பிறந்தால் தேனியில் பிறக்கணும்.. வாழ்ந்தால் கோவையில் வாழ வேண்டும்.. எல்லாமே ஏங்க வைக்கும் இடங்கள்

கோவை: பிறந்தால் தேனியில் பிறக்க வேண்டும்.. வாழ்ந்தால் கோவையில் வாழ வேண்டும் என்று ஏங்கும் அளவிற்கு எல்லா இடங்களும் அற்புதமாக இருக்கும்.. தேனி அருகில் கொடைக்கானல், மூணாறு, தேக்கடி, வாகமன் என கோடைவாசல் தலங்களும், முல்லை பெரியாறு, வைகை உள்ளிட்ட ஆறுகளும், சுருளி, கும்பக்கரை, சின்னசுருளி உள்பட பல அருவிகளும் உள்ளன. கோவையை பொறுத்தவரை, ஊட்டி, குன்னூர், வால்பாறை என கோடைவாசல் தலங்களும், கோவை குற்றாலம், ஆழியாறு, சிறுவாணி என பல அற்புதமான இடங்களும் உள்ளன.


கொடைக்கானல் மூணாறு முதலில் தேனி மாவட்டத்தில் உள்ள இடங்களை பற்றி பார்ப்போம்.. பிறந்தால் தேனியில் பிறக்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு இயற்கை அளவை கொள்ளை கொண்ட சொர்க்க பூமி.. தமிழ்நாட்டில் எப்போதுமே முப்போகம் விளையும் பூமி.. எத்தனை அருவிகள் உள்ளது என்று எண்ணவே முடியாது.. தேனியில் இருந்து வெறும் இரண்டு மணி நேர பயணத்தில் மூணாறுக்கோ அல்லது கொடைக்கானலுக்கோ அல்லது தேக்கடிக்கோ போய்விட முடியும்..
தற்போது கோடைக்காலம் தொடங்கி விட்டது. பலரும் வெயில் இல்லாத பிரதேசங்களை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்டார்கள்.. எங்காவது வெயில் குறைவாக இருக்குமா.. மரங்களும், ஆறுகளும், வற்றாத அருவிகளும் இருக்கிறதா என்று மக்கள் தேடத்தொடங்கிவிட்டார்கள்.. அவர்களுக்காகவே இந்த இயற்கை பல அற்புதமான இடங்களை கொண்டுள்ளது.. நாம் இப்போது பார்க்க போவது கோவை மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள இடங்களை பற்றித்தான்.


மேகமலை வாகமன் அதேபோல் மூன்று மணி நேரத்தில் வாகமனுக்கோ போய்விடலாம்.. இவை எல்லாம் தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள இடங்கள் ஆகும். அதேநேரம் வெறும் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேர பயணத்தில் மேகமலை, கும்பக்கரை, வீரபாண்டி, போடி மெட்டு, கொட்டக்குடி, குரங்கணி, அகமலை, அடுக்கம், சின்ன சுருளி, சுருளி அருவி, 18ம் கால்வாய் தண்ணீர் பாலம் போன்றவை உள்ளன.

எலிவால் அருவி இதுதவிர வீரப்ப அய்யனார் கோவில் மற்றும் அருவிகள், டம் டம் பாறை, எலிவால் அருவி, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை கொளுக்குமலை, சாந்தாம்பாறை, சதுரங்கப்பாறை, ராமக்கல் மேடு என ஏராளமான இடங்கள் உள்ளன. எங்கு திரும்பினாலும் அருவிகளும், ஆறுகளும் உள்ளன.கோவை சூப்பர் கோவையை பொறுத்தவரை கோவை மாநகரம் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த ஊர் ஆகும்.. எங்கு பிறந்திருந்தாலும், இங்கு வந்து நம்பிக்கையுடன் உழைந்தால் சில வருடங்களில் செட்டில் ஆகிவிடலாம். அந்த அளவிற்கு தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. மிக வேகமாக வளரும் நகரமாக கோவை இருக்கிறது. கோவையில் செட்டில் ஆனவர்கள் சுற்றி பார்க்க எத்தனையே இடங்கள் உள்ளன.

ஊட்டி, குன்னூர் கூப்பிடும் தூரத்தில் தான், ஊட்டி, குன்னூர், தொட்டபெட்டா, கொடநாடு என நீலகிரி மாவட்டமே கோவைக்கு மேல் தான் உள்ளது. கோவை அருகே என்றால், கோவை குற்றாலம், வெள்ளியங்கிரி மலை, வால்பாறை, ஆழியாறு அணை, திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவி, மருதமலை முருகன் கோவில், சிறுவாணி அணை, பரளிக்காடு என ஏராளமான இடங்கள் உள்ளன. கோவை மாநகருக்குள் ஏராளமான பூங்காக்கள் உள்ளன.

மஞ்சூர் சாலை கோவையில் இருந்து ஊட்டிக்கு மேட்டுப்பாளையம் வழியாக இல்லாமல், கோவையில் இருந்து காரமடை வழியாக முள்ளி, குந்தா, மஞ்சூர் வழியாகவும் ஊட்டிக்கு போக முடியும்.. வனவிலங்கு நடமாட்டம் அதிகமுள்ள இந்த சாலையை பொறுத்தவரை மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது. இந்த சாலையில் பயணிப்பது திரில்லான அனுபவம் ஆக இருக்கும். கோவை குற்றாலம் பாலக்காடு ஏரியாவும் கோவையில் கூப்பிடும் தூரத்தில் உள்ளதால் அங்குள்ள மலம்புழா அணைக்கும் சென்று வரலாம்.. கோவை பொறுத்தவரை நகரின் சத்தத்தில் இருந்து எளிதாக தப்பித்து கோவை குற்றாலம் போய் என்ஜாய் பண்ண முடியும்.. சென்னைக்கு ஒன்றுமே இல்லை ஆனால் சென்னைவாசிகளுக்கு அப்படி எந்த இடமும் இல்லை.. இன்றைக்கு அடிக்கும் வெயிலுக்கு சென்னையில் இருந்து குளுகுளுவென கோடை வாசல் தலம் போக வேண்டும் என்றால், ஊட்டி அல்லது கொடைக்கானல் தான் வர வேண்டும். குறைந்தது 10 மணி நேரம் அவர்கள் பயணித்தால் தான் அடைய முடியும். ஆனால் தேனியில் உள்ளவர்களோ, கோவையில் உள்ளவர்களோ வெறும் 2 மணி நேரத்தில் போய்விட முடியும்.