நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல் உள்பட 12 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

சென்னை: குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.. இதன் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.பொதுவாகவே ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெப்பச்சலனம் மற்றும் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்வது வழக்கம். அதாவது என்ன தான் வெயில் அடித்தாலும் அவ்வப்போது கோடை மழை பெய்யும். குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் இந்த மழைப்பொழிவு அதிகமாக இருக்கும். அந்த வகையில் கடந்தசில நாட்களாக திடீரென கனமழை பெய்து வருகிறது.


நெல்லையில் மழை நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் தச்சநல்லூர், பொட்டல், கோட்டூர், தாழையூத்து உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை அரை மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதேபோல் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் பலத்த மழைபெய்தது. மதுரையில் மழை மதுரை மாவட்டம் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக நேற்று மழை பெய்தது. திருமங்கலம் மட்டுமின்றி விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் அதனை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.

கொடைக்கானலில் மழை:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இந்த மழையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தேனி மாவட்டத்திலும் நேற்று பரவலாக கனமழை பெய்தது. இந்நிலையில், நீலகிரி முதல் நெல்லை வரையிலான மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், “குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மழைக்கு வாய்ப்பு இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 3) முதல் வரும் ஏப்ரல் 5-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோவை மதுரை இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (ஏப்ரல் 4) மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் சேலம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னைக்கு மழை இல்லை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை. ஏப்ரல். 2-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின் விவரம்.. எங்கு அதிக மழை விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் 7 செ.மீ., கோவை மாவட்டம் மக்கினம்பட்டி, தேனி மாவட்டம் சோத்துப்பாறை ஆகிய இடங்களில் 4 செ.மீ., கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.