கோவையின் மிகப்பெரிய குறை எல் & டி சாலை தான்.. எப்போது நிலைமை மாறும்.. அரசு சொன்னதை கவனித்தீர்களா?

கோவை: தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவையில் மிகப்பெரிய குறை என்றால் அது எல் & டி சாலை தான்.. தொலைநோக்கு பார்வையோடு அமைக்கப்பட்ட புறவழிச்சாலை என்ன காரணத்திலோ இன்று வரை ஆறுவழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படவில்லை.. வெறும் இருவழிச்சாலையாகவே தொடர்கிறது. இந்த சாலையின் விரிவாக்கம் குறித்து அமைச்சர் எவ வேலு இன்று விளக்கம் அளித்தார். அது பற்றி இப்போது பார்ப்போம்.


தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவையில் உள்கட்டமைப்பு வசதிகள் எவ்வளவோ மாறிவிட்டன.2005ம் ஆண்டில் கோவை வந்துவிட்டு போனவரை 2025ம் ஆண்டு கூப்பிட்டு வந்தால், அவர் வாயடைத்து போய்விடுவார். அந்த அளவிற்கு அத்தனை சாலைகளும் மாறிவிட்டன. ஆனால் அவரே வந்து ஆச்சர்யப்படும் ஒரு விஷயம் இருக்கும் என்று சொன்னால் அது எல் அண்டு டிசாலை தான். கோவையின் மிகப்பெரிய குறையாக இன்று வரை தொடர்கிறது.

அவினாசி சாலை என்ன காரணத்தினாலே கோவையின் ஒரே புறவழிச்சாலை விரிவாக்கம் செய்யப்படாமல் இருக்கிறது. நகருக்குள் இருக்கும் பெரும்பாலான சாலையாக மாறிவிட்டது. அவினாசி சாலை எல்லாம் துல்லியமான ஆறுவழிச்சாலையாகும். துல்லியமான ஆறுவழிச்சாலை என்ற சொல்ல காரணம்.. இடையில் எங்குமே எந்த குறுக்கீடும் வராது. எல்லாமே மேம்பாலம் என்கிற வகையில் இருக்கும். பிளேமேடு கடந்தால் மின்னல் வேகத்தில் அவினாசி போய்விட முடியும். நீலாம்பூர் மதுக்கரை ஆனால் கோவை மாநகருக்குள் நுழையாமல் நீலாம்பூரில் இருந்து, புறநகர் பகுதியான மதுக்கரை செல்லும் வகையில் 26 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ள இருவழிச்சாலை, இன்று வரை ஆறுவழிச்சாலையாக்கப்படவில்லை என்பது திகைக்க வைக்கும் கசப்பான உண்மை. . இந்த சாலையை எல்.அண்டு.டி. நிறுவனம் பராமரித்து வருகிறது.

போக்குவரத்து நெரிசல் இந்த சாலை குறுகியதாக இருப்பதாலும், ஏராளமான வாகனங்கள் செல்வதாலும் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. ராவத்தூர், வெங்கிட்டாபுரம், ஈச்சனாரி, போடிபாளையம், நாச்சிபாளையம், சிந்தாமணி புதூர் பிரிவுகளில் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருவதால் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை நீண்ட காலமாக கோரிக்கை இருக்கிறது. ஈஸ்வரன் கேள்வி இந்த சாலை குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரன் இன்று கேள்வி எழுப்பினார். அப்போது அவர் கூறும் போது, “சேலம் – கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் எல் & டி சாலை விரிவாக்கம் செய்ய வேண்டி கோரிக்கை வைத்தோம். அந்த கோரிக்கையின் நிலை என்ன?” எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.

எவ வேலு விளக்கம் இதற்குப் பதில் அளித்து அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், “இந்த எல் & டி சாலையை விரிவாக்கம் செய்ய பல சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்டுள்ளனர். இந்த சாலை தொடர்பாக எல் & டி நிறுவனத்திடம் 2032வரை சாலை ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இந்த சாலையில், 6 இடங்களில் எல் & டி நிறுவனம் சுங்க கட்டணம் வசூலித்து வருகிறது. இந்த சாலையை அரசுக்கு வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. 199 கோடி பணம் மேலும் தொடர் பேச்சுவார்த்தை நடந்துள்ள நிலையில் எல் & டி நிறுவனம் பணம் கேட்டிருக்கிறார்கள். இதன்படி அரசு, எல் & டி நிறுவனத்திற்கு ரூ. 199 கோடி பணம் ஒப்படைத்ததும், சாலையை அரசு பெறும். அதன் பின் மத்திய அரசு தமிழ்நாடு அரசிடம் வழங்கினால் நாம் பணிகளைத் தொடருவோம். இல்லையெனில் மத்திய அரசே பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தப்படும்” என்று பதில் அளித்தார்.

அதிகாரிகள் விளக்கம் முன்னதாக கடந்த வாரம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதுபற்றி கூறும்போது, மத்திய அரசு தனியார் நிறுவனத்துக்கு நஷ்டஈடு வழங்கி மதுக்கரை முதல் நீலாம்பூர் வரை உள்ள 26 கி.மீ. தூரம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு இந்த சாலை 4 வழிச்சாலையாகவோ, 6 வழிச்சாலையாகவோ விரிவாக்கம் செய்யப்படும். சுங்கக்சாவடிகள் குறையும் இந்த வழித்தடத்தில் உள்ள 6 சுங்கச்சாடிகள் அகற்றப்பட்டு, ஒரே சுங்கச்சாவடி அமைக்கப்பட வாய்ப்பு உள்ளது. எல் அண்டு டி புறவழிச்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளை கையகப்படுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தில் இருந்து கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக வரும் ஜூன் மாதத்தில் இருந்து சுங்கச்சாவடி வசூல்பணி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வரும்” என அதிகாரிகள் கடந்த வாரம் தெரிவித்தனர்.