கோவை: கோவை – அவினாசி ரோடு மற்றும் சத்தி சாலையின் இணைப்பு சாலையாக பீளமேடு தண்ணீர் பந்தல் இருக்கிறது. ஹோப் கல்லூரி சந்திப்பில் தொடங்கும் தண்ணீர் பந்தல் சாலை வழியாக டைடல் பார்க் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை கடந்தால் சரவணம்பட்டி காவல்நிலைய சோதனைச்சாவடி வழியாக சத்தி சாலைக்கு எளிதாக போக முடியும். இங்குள்ள ரயில்வே கேட்டில் கட்டப்பட்ட மேம்பால பணி பாதியில் நின்றது. அந்த மேம்பால பணியை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கோவை மாநகரை பொறுத்தவரை அவினாசி சாலை பகுதியிலும், சரவணம்பட்டி சாலை பகுதிகளிலும் ஏராளமான தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், மிகப்பெரிய தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இந்த இருசாலைகளையும் இணைக்கும் பகுதிகளாக பீளமேடு தண்ணீர் பந்தல் சாலை இருக்கிறது. இந்த தண்ணீர் பந்தல் சாலை வழியாக அவினாசி ரோட்டில் இருந்து சத்தி சாலையை எளிதாக அடையலாம்.
ஹோப் கல்லூரி சந்திப்பில் தொடங்கும் தண்ணீர் பந்தல் சாலை வழியாக டைடல் பார்க் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை கடந்து சரவணம்பட்டி காவல்நிலைய சோதனைச்சாவடி வழியாக சத்தி சாலையை எளிதாக அடையலாம். அதாவது சத்தி சாலையில் சரவணம்பட்டி அருகில் உள்ள துடியலூர் உள்பட சுற்றுவட்டார பகுதி மக்கள், நகருக்குள் சுற்றிவராமல் நேராக வழியாக சேரன் மாநகர், இந்து மாநகர், ஜீவாநகர், விளாங்குறிச்சி, காளப்பட்டி பிரிவு வழியாக எளிதாக கடந்து போகலாம். ஆனால் இங்குள்ள சிக்கல் என்னவென்றால், ரயில் தண்டவாளம் தான். கோவையின் பிரதான ரயில் வழித்தடம் இங்கு செல்கிறது. இதன் காரணமாக, அடிக்கடி ரயில்வே கேட் அடைக்கப்படுவது வழக்கம். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கிறது.
இதைத்தொடர்ந்து அந்த ரயில் தண்டவாளத்தின் குறுக்கே மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் மேம்பாலம் கட்ட மாநில அரசு முடிவு செய்தது. அதன்படி, கடந்த 2006-ம் ஆண்டு 549 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அகலத்துடன் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. ரயில் பாதையின் தெற்கு பகுதியில் 8 தூண், வடக்கு பகுதியில் 7 தூண், அணுகு சாலைகள் மற்றும் சர்வீஸ் சாலைகளுடன் மேம்பாலம் அமைக்க அரசு திட்டமிட்டது. இதைத்தொடர்ந்து தெற்கு ரெயில்வேயின் கட்டுமான பிரிவு சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு ரயில் தண்டவாளத்திற்கு மேல் மேம்பாலம் கட்டும் பணிகள் நிறைவு பெற்றது.
Leave a Reply