சென்னை: இந்துக்களுக்கு பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்து கொடுத்ததாக இந்து முன்னணி வதந்தி பரப்பி வருகிறது என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
கோவையில் பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்ததற்காக 2 ஆண்டுகளுக்கு முன் கடைக்கு சீல் என வதந்தி பரவி வரும் நிலையில், தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளது.பரவிய வதந்தி இந்து முன்னணி அமைப்பின் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், பிரியாணி குறித்து ஒரு வீடியோ வெளீயிடப்பட்டிருந்தது. “பிரியாணி ஓர் பேராபத்து! Biryani centre to fertility centre! ஓர் உண்மை அலசல்” எனக் குறிப்பிடப்பட்டு ஒருவர் பேசும் வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. “கோவையில் பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்ததற்காக 2 ஆண்டுகளுக்கு முன் ஒரு கடைக்குச் சீல் வைக்கப்பட்டது. இஸ்லாமியர்களுக்கு வேறு பிரியாணியும், இந்துக்களுக்குக் கருத்தடை மாத்திரை கலந்த பிரியாணியும் கொடுப்பதால் இளைஞர்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுகிறது.” என்று இந்து முன்னணி அமைப்பின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொளியில் குறிபிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன? கோவையில் பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுவதாகச் சமூக வலைதளங்களில் “பிரியாணி ஜிகாத்” என்ற ஹேஷ்டேக்குடன் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒரு தகவல் பரவியது. அப்போதே இது வதந்தி என்று தெளிவுபடுத்திய காவல்துறை, இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் வதந்தி பரப்பியதாகக் கூறி 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில், தற்போது, அந்த வதந்தியை பிரதானப்படுத்தி, இந்து முன்னணி எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது வதந்தி என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
Leave a Reply