கோவையை உச்சத்திற்கு கொண்டு போகும் ப்ராஜெக்ட்.. கரூர் – கோவை எக்ஸ்பிரஸ் வே.. முக்கிய அறிவிப்பு

கோயம்புத்தூர்: கோவை – கரூர் நெடுஞ்சாலை விரிவாக்கம் தொடர்பாக டிபிஆர் தயாரிக்கப்பட்டு அதற்கான ஒப்புதல் பரிசீலனையில் உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த சாலை விரிவாக்கப்படும் செய்யப்படும் நிலையில் ஏற்கனவே இங்கே எக்ஸ்பிரஸ் வே அமைக்கப்பட உள்ளது.


கோயம்புத்தூர் – கரூர் 4 வழிச்சாலை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. பல்லடம் வரை ஏற்கனவே முடியும் நிலையில் உள்ளது. பல்லடம் முதல் வெள்ளக்கோவில் வரை கிட்டத்தட்ட பணிகள் முடிந்துவிட்டது. இடையே தரைவழி பாலங்கள், சுரங்கங்கள் அமைக்கும் பணிகள் மட்டும் நிலுவையில் உள்ளன.

வெள்ளக்கோவில் முதல் கரூர் வரை ஒரு பக்கம் பணிகள் முடிந்து உள்ளன. இன்னொரு பக்கம் பணிகள் நடந்து வருகின்றன. வாகனங்களின் அபரிமிதமான எண்ணிக்கையின் காரணமாக பெருகிவரும் போக்குவரத்து இடையூறுகளைக் கருத்தில் கொண்டு, NHAI சில ஆண்டுகளுக்கு முன்பு கரூர் மற்றும் கோயம்புத்தூர் இடையே புதிய எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க திட்டத்தை முன்வைத்தது. இதையடுத்து NHAI அதிகாரிகள், போக்குவரத்தின் அளவை அளவிடுவதற்கும் புதிய சாலையின் சீரமைப்பைக் கண்டறிவதற்கும் பல ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த திட்டம் NHAI கூட்டங்களில் நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்து இருந்தாலும் இதுவரை நிறைவேற்றப்படாமல் இருந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த திட்டத்தின் பணிகள் தீவிரம் அடைந்து உள்ளன. கரூர் மற்றும் கோவை இடையே தற்போதுள்ள நெடுஞ்சாலைக்கு இணையாக கூடுதலாக இரண்டு லேன்களை இந்த சாலை கொண்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதிகாரப்பூர்வ ஆதாரத்தின்படி, இந்த திட்டத்திற்காக மத்திய அரசு கிட்டத்தட்ட ₹400 கோடியை அனுமதித்துள்ளது. இதில், வெள்ளக்கோவில் முதல் பல்லடம் வரையிலான 47 கி.மீ., தூரத்துக்கு, 274 கோடி ரூபாய், நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும். பல்லடம் – கோயம்பேடு சாலையை நெடுஞ்சாலை துறை ஏற்கனவே பல பகுதிகளாக விரிவுபடுத்தி வருகிறது. வெள்ளக்கோவில்-பல்லடம் சாலைக்கான பணிகள் தொடங்கி உள்ளன. விரைவில் கட்டுமானப் பணிகள் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படும். கரூரில் இருந்து வெள்ளக்கோவில் வரையிலான சாலையை சுமார் ₹130 கோடியில் விரிவுபடுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. திருச்சி: இது போக சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ் வே வழித்தட கட்டுமானம் சட்டச் சிக்கலில் சிக்கியுள்ள நிலையில், பாரத்மாலா பரியோஜனா இரண்டாம் கட்டத்தின் கீழ், சென்னை மற்றும் திருச்சியை இணைக்கும் இரண்டாவது எக்ஸ்பிரஸ் வழித்தடத்தை உருவாக்க தேசிய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சமீபத்தில் நாடு முழுவதும் சுமார் 6,747 கிமீ தூரத்திற்கு இரண்டாம் கட்டத்தின் கீழ் எக்ஸ்பிரஸ்வேகள், பொருளாதார வழித்தடங்கள் மற்றும் இடை-வழிச்சாலைகளை மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கைகளைத் தயாரிப்பதற்காக ஆலோசகர்களை பணிக்கு அமர்த்தி உள்ளது. சென்னை-திருச்சி விரைவுச்சாலை 310 கி.மீ நீளமும், பிள்ளையார்பட்டி-தூத்துக்குடி வழித்தடம் 160 கி.மீ நீளமும் இருக்கும். இதை சேர்த்து மொத்தமாக 470 கிமீ தூரத்திற்கு எக்ஸ்பிரஸ் வே சாலை அமைக்கும் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. ஏற்கனவே அங்கே அமைக்கப்பட்டு உள்ள 4 வழி சாலை பகுதியில் கூடுதல் நிலம் கையகப்படுத்தப்பட்டு அது 8 வழி சாலையாக மாற்றப்படும் என்று தகவல்கள் வருகின்றன. தற்போது இங்கே பயண நேரம் 5. 55 மணி நேரமாக உள்ளது. இது 4 மணி நேரத்திற்கு கீழ் குறையும் என்று கூறப்படுகிறது. இதற்கான பணிகள் நடக்க உள்ளன.