பெங்களூரு – கண்ணுாருக்கு கோவை வழியாக சிறப்பு ரயில்

கோவை : தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, கோவை வழியாக பெங்களூரு – கண்ணுார் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, எஸ்.எம்.வி.டி., பெங்களூரு – கண்ணுார்(06573) சிறப்பு ரயில் பெங்களூருவில் இருந்து இன்று இரவு 11:55 மணிக்கு புறப்பட்டு நாளை மதியம் 1:30 மணிக்கு கண்ணுார் சென்றடையும்.மறுமார்க்கத்தில் கண்ணுார் – எஸ்.எம்.வி.டி., பெங்களூரு(06574) சிறப்பு ரயில், கண்ணுாரில் இருந்து 14 ம் தேதி மாலை 6:25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:00 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.ஏ.சி., முதல் வகுப்பு, இரண்டடுக்கு, மூன்றடுக்கு, படுக்கை வசதி, பொது இரண்டாம் வகுப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, சொரனுார், திரூர், கோழிக்கோடு, வடக்கரா, தலசேரி ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.எஸ்.எம்.வி.டி., பெங்களூரு – கண்ணுார்(06573) சிறப்பு ரயில் கோவைக்கு, காலை 8:12 மணிக்கு வந்து, காலை 8:15 மணிக்கு புறப்படும்.

கண்ணுார் – எஸ்.எம்.வி.டி., பெங்களூரு(06574) சிறப்பு ரயில், 15 ம் தேதி நள்ளிரவு, 12:27 மணிக்கு வந்து, நள்ளிரவு, 12:30 மணிக்கு புறப்படும்.