வாழ்க்கையில் சாதிக்கலாம் வாங்க சகோ!  ‛’உற்சாக டானிக்’ தருகிறார் தன்னம்பிக்கை பயிற்சியாளர்

வாழ்க்கையில் சாதிக்க வேண்டும். அதற்கு எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் முக்கியம் என்கிறார் தன்னம்பிக்கை பயிற்சியாளர் லட்சுமி காந்தன்.அதிதீவிர நம்பிக்கை


வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு தேவையான ஒரே சக்தி, அதி தீவிரமான நம்பிக்கை மட்டுமே. என்னால் இதை செய்ய முடியும்; நான் உறுதியாக வெற்றி பெறுவேன் என்ற மனக்குரல், பிறரிடம் நமக்கு கிடைக்கும் ஊக்கமல்ல. இது நம் ஆழ்மனதிலிருந்து உருவாகும் உச்சபட்ச நம்பிக்கை.களம் காண வேண்டும்


நம்பிக்கையை மட்டும் வைத்துக் கொண்டால் போதுமா; களமிறங்கினால் தானே, அதனுடைய முடிவு நமக்கு தெரியும். போட்டிகளை பார்த்து கைத்தட்டுவது ஒரு ரகம். மைதானத்துக்குள் இறங்கி விளையாடுவது மற்றொரு ரகம். எந்த ஒரு காரியத்திலும், அதன் முடிவு பற்றி சிந்திக்காதீர்கள். முடிந்தளவு மோதிப் பார்க்க வேண்டும்.

வாய்ப்பை பயன்படுத்துக


உங்கள் வீட்டு கதவு தட்டப்படுகிறதா… அது யாரோ’ மனிதர்கள் என்று நினைக்க வேண்டாம்; சில சமயம் அது நல்ல வாய்ப்பாக கூட இருக்கலாம். காலம் கடந்த பின், ‘அப்போதே அந்த வாய்ப்பு வந்துச்சு. சரியா பயன்படுத்தியிருந்தா, இன்றைக்கு என்னோட உயரமே வேற’ என்று சொல்பவர்களை, தினமும் நாம் சந்தித்து வருவது நினைவிருக்கட்டும்.

தோல்வியை கொண்டாடுங்கள்


வெற்றி பெற்றவர்களையே இந்த உலகம் கொண்டாடி வருகிறது. தோல்வியடைந்தவர்களை பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை. தோல்வியும் தேவை. இதிலிருந்து தான் பாடம் கற்றுக் கொள்ள முடியும். அடுத்து, அடுத்து, அடுத்து என்று ஒவ்வொரு படிநிலையிலும் செல்லக்கூடிய பாதையை ஏற்படுத்துவது, தோல்வி நமக்கு சொல்லும் சேதி தான்!