இதையடுத்து ‘பிக் அப்’ பகுதிக்கு ‘பைக் டாக்ஸி’ ஓட்டுநர் சென்று கொண்டிருக்கும் போது, அவரை அழைக்கும் மர்ம நபர், அருகில் உள்ள மருத்துவமனையில் தனது உறவினருக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது. அவரது ‘கூகுள் பே’ வேலை செய்யவில்லை. நான் உங்கள் கணக்குக்கு பணம் அனுப்புகிறேன் அதை அவர்களுக்கு பணமாக கொடுத்து உதவுங்கள் என கேட்கிறார். பின்னர், வங்கி கணக்கில் பணம் வந்தது போல், ஒரு போலி குறுஞ்செய்தியையும் அனுப்புகின்றனர்.

பின்னர், சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் அழைத்து, உறவினருக்கு நானே பணம் அனுப்பி விட்டேன் எனக்கூறி தான் அனுப்பிய பணத்தை திரும்ப அனுப்புமாறு கேட்கின்றனர்.
பணம் அனுப்ப ‘க்யூ.ஆர்’ கோடு ஒன்றையும் அனுப்புகின்றனர். இதை நம்பி சிலர் தங்களின் வங்கி கணக்கை பரிசோதிக்காமல், மொபைல் எண்ணுக்கு வந்த குறுஞ்செய்தியை நம்பி பணத்தை மோசடி நபர் அனுப்பி க்யூ.ஆர்., கோடு பயன்படுத்தி பணத்தை அனுப்பிவிடுகின்றனர்.
மோசடி நபர்கள் ரூ. 2000 – 5000 வரை பணம் கேட்பதால் எளிமையாக ஏமாந்து விடுகின்றனர்.
இது தொடர்பாக கோவை மாநகர போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வருகின்றன. இதையடுத்து, போலீசார் ‘பைக் டாக்ஸி’ ஓட்டுநர்களை அழைத்து இது போன்ற மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.
எனினும், இந்த மோசடியில் ‘பைக் டாக்ஸி’ ஓட்டுநர்கள் பலர் பணத்தை இழந்து வருகின்றனர்.டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள சூழலில், அது சார்ந்த சைபர் கிரைம் குற்றங்களும், மோசடிகளும் அதிகரித்துள்ளன.
ஆன்லைன் டிரேடிங், பகுதி நேர வேலைவாய்ப்பு, டிஜிட்டல் அரெஸ்ட், முத்ரா லோன் என பல வகை மோசடிகள் அரங்கேறி வருகின்றன.
கடந்த ஆறு மாதங்களில் சைபர் கிரைம் தொடர்பாக 2800க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. அதில் 130க்கு எப்.ஐ.ஆர்., போடப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் ரூ.25 கோடிக்கு மேல் பண இழப்பு ஏற்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வழக்கமாக நடக்கும் மோசடிகள் குறித்து அறிந்து பொது மக்கள் உஷாரானதால், தற்போது, புதுவித மோசடியில் ஈடுபட துவங்கியுள்ளனர்.
தற்போது, ‘பைக் டாக்ஸி’ ஓட்டுநர்களை குறிவைத்து புதுவித மோசடி அரங்கேறி வருகிறது. மர்ம நபர்கள் ‘பைக் டாக்ஸி’ செயலியில் ‘ரைடு’ புக் செய்கின்றனர்.
கோவை,: பைக் டாக்ஸி ஓட்டுநர்களை குறிவைத்து பணம் பறிக்கும் புதுவித மோசடி அரங்கேறி வருகிறது.
Leave a Reply