மேட்டுப்பாளையம் : காரமடை அரங்கநாதர் கோயிலில், யஜுர் உபாகர்மா எனும் பூணூல் அணியும், ஆவணி அவிட்ட வைபவம் நடந்தது.கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோயில்.
இங்கு நேற்று அதிகாலையில் நடை திறந்து, மூலவருக்கு திருமஞ்சனம், கால சந்தி பூஜை செய்யப்பட்டது.

மகா மண்டபத்தில் விஸ்வக்சேனர், ஆராதனம், புண்ணியாவாசனம், லட்சுமி நாராயண, ஆவாகனம் ஆகியவை, அரங்கநாத பெருமாளுக்கு சேவிக்கப்பட்டது.பின் வேத மந்திரங்கள் முழங்க, எக்யோப விதம் எனும் பூணூல் அணிவிக்கப்பட்டது.
வேத மந்திரங்களை வெங்கடேச பிரசாத் ஜெபிக்க, மற்றவர்கள் பூணூல் அணிந்து கொண்டனர். இதன் பின் உச்சி கால பூஜை, சாற்று முறை சேவிக்கப்பட்டது.
ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு, மங்கள ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் காட்டூர் அய்யப்பன் பஜனை மண்டபத்தில், பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர் சுப்பிரமணியம் வேத மந்திரங்களை கூறினார்.
ஆவணி அவிட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிராமணர்கள், பூணூல் அணிந்து கொண்டனர்.
Leave a Reply