கோவை மாநகராட்சி பள்ளிகளில் கற்பித்தல் இப்ப வேற லெவல்! மேலும் 6 மெய்நிகர் ஆய்வகங்கள் அமைக்க முடிவு

கோவை, ; கோவை மாநகராட்சி பள்ளிகளில் மெய்நிகர் ஆய்வகங்கள் (ஏஆர்-விஆர் லேப்) விரிவாக்கம் செய்யப்படுகின்றன.ஏற்கனவே, சித்தாபுதூர் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம் எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் மாநகராட்சி பள்ளியில், தலா ரூ.70 லட்சம் மதிப்பில், மெய்நிகர் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும் 6 பள்ளிகளில் ஆய்வகங்கள் அமைக்க, மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதன்படி, மசக்காளிப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி – ரூ.86 லட்சம்; கமலநாத் மாநகராட்சி பள்ளி – ரூ.82 லட்சம்; பீளமேடு பயனீர்மில் சாலை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி – ரூ.83.50 லட்சம்; ராமகிருஷ்ணாபுரம் மற்றும் ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நி லைப்பள்ளிகளில், தலா – ரூ.83 லட்சம் மற்றும் கணேசபுரம் முல்லை நகர் மேல்நிலைப்பள்ளி – ரூ.65.50 லட்சம் மதிப்பில், மெய்நிகர் ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளன.

எதிர்பார்ப்பு இந்த ஆய்வகங்கள், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் தொழில்நுட்ப அடிப்படையில், ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’யை, தத்ரூபமாக அனுபவிக்க வழிவகுக்கும் வகையில் உருவாக்கப்படுகின்றன. பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, இடவசதியுடன் ஆய்வகங்கள் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

‘ஆறு பள்ளிகளிலும் இடவசதி’ மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், “ஏற்கனவே அமைக்கப்பட்ட ஆய்வகங்களில் உள்ள வசதிகள், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பள்ளிகளிலும் ஏற்படுத்தப்படும். மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. பள்ளிகளில் உள்ள வகுப்பறை வசதிகளுக்கு ஏற்ப, ஆய்வகங்கள் வடிவமைக்கப்படும். பயிற்றுநர்களும் நியமிக்கப்படுவார்கள்,” என்றார்.