அன்னுார்:தலையில் கல்லை போட்டு, பெண்ணை கொலை செய்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம், அன்னுாரை சேர்ந்த குமார் ம கன் ரஞ்சித், 19. இவர், நேற்று கஞ்சா போதையில், சொக்கம்பாளையம் தனியார் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஒரு மாட்டை கற்களால் தாக்கினார். அதை தோட்டத்து விவசாயி வேலுமணி, 46, தடுக்க முயன்றார். அவர் மீதும் ரஞ்சித் கற்களை வீசியதில் வேலுமணி காயமடைந்தார்.பின், அருகே உள்ள சகுந்தலா, 52, வீட்டு தோட்டத்துக்கு சென்று அங்கு கட்டப்பட்டிருந்த மாட் டின் மீது ரஞ்சித் கற்களை வீசினார். சத்தம் கேட்டு சகுந்தலா வந்தார். அவரையும் ரஞ்சித் கற்களால் தாக்கினார். கீழே விழுந்த சகுந்தலா மீது பெரிய கல்லை எடுத்து போட்டதில், சகுந்தலா இறந்தார்.

அங்கிருந்த, கட்டட தொழிலாளி சின்னசாமி, 60, கார்த்திகா, 18, கவிதா, 45, ஆகியோர் மீதும், ரஞ்சித் கற்களை வீசினார். இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்தவர்கள், ரஞ்சித்தை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அன்னுார் போலீசார், ரஞ்சித்தை கைது செய்தனர்.
Leave a Reply