கோவை மக்களே பிப்ரவரி 21 ஆம் தேதியை மறந்துடாதீங்க.. ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கோவை: கோவையில் வேலைவாய்ப்பை தேடி வரும் இளைஞர்களுக்கு உதவிடும் வகையில், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய வளாகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) நடைபெற உள்ளது என்று கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு முகாமில் நடத்தப்படுகிறது. இதன்படி வருகிற பிப்ரவரி 21 ஆம் தேதி காலை 10 மணி முதல் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பிப்ரவரி மாதத்துக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் பிப்ரவரி 21 காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப் படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டப் படிப்பு முடித்த அனைவரும் தங்களின் சுயவிவரம் மற்றும் கல்விச் சான்றுகளுடன் பங்கேற்கலாம்.
தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான ஆள்களைத் தோ்வு செய்யவுள்ளன. முகாமில் தோ்வு செய்யப்படுபவா்களுக்கு அப்போதே பணிநியமன ஆணை வழங்கப்படும். பணி நியமனம் பெறுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
எனவே, இம்முகாமில் பங்கேற்க விரும்பும் தனியாா் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடுவோா் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 0422 – 2642388 என்ற எண்ணைத் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.