சென்னை: சென்னை கோயம்பேடு சந்தைக்கு 10,000 டன் காய்கறிகள் வந்து குவிந்துள்ளன.. இதனால், காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. ஆனால், கோடை காலம் துவங்க உள்ளதால், வரும் நாட்களில் காய்கள் வரத்து குறைவாகவும் விலை அதிகமாகவும் இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தை, நம்முடைய கோயம்பேடு மார்க்கெட்தான்.. ஏனென்றால், 1000-க்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக்கடைகள், 2000-க்கும் மேற்பட்ட சில்லறை கடைகள், 850 பழக்கடைகள் என பிரம்மாண்டமாக கோயம்பேடு மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்டட லாரிகளில் காய்கறிகள் தினந்தோறும் இங்கு குவிந்துவிடும். இதனால், இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் விற்பனை நடப்பது வாடிக்கையாகும். குவிந்த காய்கறிகள் வழக்கமாக, தினமும் 7,000 டன் காய்கறிகள் வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை வழக்கத்தைவிட 3,000 டன் கூடுதலாக காய்கறிகள் வந்து குவிந்துள்ளதாம்.. இதனால், இதனால் காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், 1 கிலோ வெங்காயம் – ரூ.25 முதல் ரூ.30; சின்னவெங்காயம்-1 கிலோ ரூ.50; உருளைக்கிழங்கு-கிலோ ரூ.18; முட்டைகோஸ்-ரூ.10; தக்காளி கிலோ ரூ.10 முதல் ரூ.13; கேரட் ரூ.10 முதல் ரூ.15, பீட்ரூட், பீன்ஸ்-கிலோ ரூ.25, வெண்டைக்காய்-கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காராமணி-கிலோ ரூ.30; பாவைக்காய், புடலங்காய்-கிலோ ரூ.25; சுரக்காய்-ரூ.20; வெள்ளரிக்காய்-ரூ.20; பச்சைமிளகாய்-கிலோ ரூ.15 முதல் 20; இஞ்சி-கிலோ ரூ.30 முதல் ரூ.35; பூண்டு ரூ.100 முதல் ரூ.125; அவரக்காய்-ரூ.15, பூசணிக்காய்-ரூ.10, பீா்க்கங்காய், எலுமிச்சை-ரூ.30; கோவக்காய்-ரூ.20; கொத்தவரங்காய், வாழைத்தண்டு மரம்-ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. கோவையிலும் விலை குறைந்தது அதேபோல, கோவை கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் நேற்று, தக்காளி (15 கிலோ பெட்டி) – 250, தேங்காய் (ஒன்று) – 40, கத்தரிக்காய் – 8, வெண்டைக்காய் – 30, முள்ளங்கி – 18, வெள்ளரிக்காய் – 22, பூசணிக்காய் – 10, அரசாணிக்காய் – 8, பாகற்காய் – 30, புடலை – 15, சுரைக்காய் – 10, பீக்கங்காய் – 40, பீட்ரூட் – 15, அவரைக்காய் – 30, பச்சை மிளகாய் – 20 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தைவிட தக்காளி (பெட்டி) – 20, தேங்காய் (ஒன்று)- 4, வெள்ளரிக்காய் – 7 ரூபாய் விலை அதிகரித்துள்ளதாம். ஆனால், கத்தரிக்காய், முள்ளங்கி, பூசணிக்காய் – 2, சுரைக்காய், பீக்கங்காய், அவரைக்காய் – 5 மற்றும் பாகற்காய், புடலை மற்றும் பச்சை மிளகாய் – 10 ரூபாய் விலை குறைந்திருக்கிறது.
விலை உயர வாய்ப்பு:இதுகுறித்து வியாபாரிகள் சொல்லும்போது, “கடந்த வாரத்தைக் காட்டிலும் இந்த வாரம் காய்கள் விலை கணிசமாக குறைந்துள்ளது. ஆனால், தேங்காய் தக்காளி, வெள்ளரிக்காய் விலை மட்டும் உயர்ந்துள்ளது. மற்ற அனைத்து காய்களும் விலை குறைவாக உள்ளது. கோடை காலம் விரைவில் துவங்க உள்ளதால், வரும் நாட்களில் காய்கள் வரத்து குறைவாகவும் விலை அதிகமாகவும் இருக்க வாய்ப்புள்ளது” என்றனர்.
Leave a Reply