ஈஷா யோகா மைய சிவராத்திரி விழாவில் பங்கேற்க.. இன்று கோவை வருகிறார் அமித்ஷா.. 7000 போலீஸ் பாதுகாப்பு

கோவை: ஈஷா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கோவை வருகிறார். அமித்ஷாவின் வருகையையொட்டி, கோவையில் 7 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை அவிநாசி சாலை, பீளமேடு பகுதியில், கோவை மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நாளை அதாவது பிப்ரவரி 26 தேதி, காலை நடக்கிறது.


இந்த நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு புதிய அலுவலக கட்டிடத்தை திறந்து வைக்கிறார். மேலும், கோவையில் இருந்து ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள புதிய கட்சி அலுவலக கட்டிடங்களையும் மத்திய அமைச்சர் அமித்ஷா கானொலிக்காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.இந்த நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு புதிய அலுவலக கட்டிடத்தை திறந்து வைக்கிறார். மேலும், கோவையில் இருந்து ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள புதிய கட்சி அலுவலக கட்டிடங்களையும் மத்திய அமைச்சர் அமித்ஷா கானொலிக்காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

ஈஷா யோகா மைய வளாகம் நாளை மாலை கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில், மகா சிவராத்திரி விழாவில், சிறப்பு விருந்தினராக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார். மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு 9 மணியளவில் கோவை வருகிறார் அமித்ஷா.. பிறகு அவர் கார் மூலம் அவினாசி சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி ஓய்வு எடுக்கிறார்.

கட்சி அலுவலகங்கள் திறப்பு நாளை காலை கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்று புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார். இந்நிகழ்வில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன், பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.கட்சி அலுவலகம் திறப்புக்கு பிறகு, அங்கேயே முக்கிய கட்சி நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். மேலும், கோவையைச் சேர்ந்த முக்கிய தொழிலதிபர்கள் உள்ளிட்டோர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பலத்த போலீஸ் பாதுகாப்பு பின்னர், அன்றைய தினம் மாலை ஈஷாவில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார்… அன்று இரவு, ஈஷா வளாகத்திலேயே தங்கும் அமித்ஷா, மறுநாள் காலை ஹெலிகாப்டர் மூலமாக ஈஷாவில் இருந்து புறப்பட்டு, கோவை விமான நிலையத்துக்கு வந்தடைகிறார். பிறகு கோவையிலிருந்து விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார். முன்னதாக, மத்திய அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கோவையில் 7000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.. அமித்ஷா தங்குமிடம், பீளமேடு கட்சி அலுவலகம் உள்ள பகுதி, ஈஷா வளாகம், அமித்ஷா செல்லும் பாதைகள் ஆகிய இடங்கள் போலீஸாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.