வேலுமணி வீட்டு திருமணம்! எடப்பாடி ஆப்சென்ட்… ஆனா சிரித்த முகத்துடன் பாஜக தலைவர்கள்! நோட் பண்ணுங்க

கோவை: அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி இல்ல திருமண விழா நேற்று கோவையில் நடந்த நிலையில், அதில் பல அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி பலரும் கூட பங்கேற்றனர். ஆனால், இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.கோவை மாவட்டத்தில் அதிமுகவின் பிரதான தலைவராக இருப்பவர் எஸ்.பி. வேலுமணி. எடப்பாடி முதல்வராக இருந்த போது அமைச்சரவையில் பவுர்புல் இடம் இவருக்கு இருந்தது.

எஸ்பி வேலுமணி இல்ல திருமணம்

இப்போதும் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உள்ள வேலுமணி, அதிமுக தலைமை நிலையச் செயலாளராகவும் இருக்கிறார். இதற்கிடையே அவரது மகன் விகாஸின் திருமண விழா நேற்று மார்ச் 3ம் தேதி நடைபெற்று. கோவை ஈச்சநாரி பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலுமணியின் மகன் விகாஸ்- தீக்‌ஷனா திருமணம் நடைபெற்றது.இதில் பாஜக தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை ஆகியோர் நேரில் வந்து வாழ்ந்து தெரிவித்தனர். இருவரது காலிலும் விழுந்து புதுமண தம்பதியினர் ஆசீர்வாதம் பெற்றனர். மேலும், மத்திய அமைச்சர் எல் முருகன், குஷ்பு எனப் பல பாஜக தலைவர்கள் நேரில் வந்து புதுமண தம்பதியினரை வாழ்த்தினர்.