கோவை சங்கீதாவின் உடலை பார்த்து ஆடிப்போன டாக்டர்கள்.. எடுக்க எடுக்க வந்த குண்டுகள்.. அதிர வைத்த கணவன்

கோவை: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வண்டாழி ஈராட்டுக்குளத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் கோவையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சுற்றுலா வழிகாட்டியான இவருக்கு, சங்கீதா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். மனைவி மீது சந்தேகப்பட்ட அவர் 3 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதில் மொத்தம் 29 குண்டுகள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வண்டாழி ஈராட்டுக்குளத்தை சேர்ந்த 52 வயதாகும் கிருஷ்ணகுமார் சுற்றுலா வழிகாட்டியாவார். இவர் மலேசியாவில் முன்பு வேலை பார்த்து வந்தார். பின்னர் கிருஷ்ணகுமார் குடும்பத்துடன் கோவை அருகே பட்டணம் லட்சுமி நகரில் குடியேறினார். வந்தார். இவருடைய மனைவியான சங்கீதாவுக்கு 46 வயது ஆகிறது. இவர்களுக்கு 16 மற்றும் 13 வயதில் 2 மகள்கள் உள்ளனர்.சங்கீதா கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவருக்கும், ஒரு டாக்டருக்கும் நட்பு ஏற்பட்டதாம். இதையறிந்த கிருஷ்ணகுமார் மனைவியை கடுமையாக கண்டித்தாராம். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 3ம் தேதி அன்று காலையில் இரண்டு மகள்களும் பள்ளிக்கூடத்துக்கு சென்றுவிட்டனர். வீட்டில் கணவன்-மனைவி மட்டும் இருந்திருக்கிறார்கள். அப்போது கிருஷ்ணகுமார் தனது மனைவியிடம் அந்த டாக்டர் குறித்து கேட்டிருக்கிறாராம். நட்பாக பழகுபவரை தவறாக சொல்ல வேண்டாம் என்று கூறியுள்ளாராம் சங்கீதா..இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணகுமார் நாட்டு துப்பாக்கியை எடுத்து மனைவியை சரமாரியாக சுட்டு கொன்றார். பின்னர் அவர் தனது காரை எடுத்துக்கொண்டு சொந்த ஊரான பாலக்காட்டில் உள்ள வண்டாழி ஈராட்டுக்குளத்துக்கு சென்று, அவரும் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவை மாவட்டம் சூலூர் போலீசார், சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சங்கீதாவின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.அப்போது அவருடைய உடலில் 29 குண்டுகள் இருந்ததை பார்த்து டாக்டர்கள் ஆடிப்போனார்கள்.. பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.என்ன நடந்தது: காட்டுப்பன்றிகளை சுட பயன்படுத்தும் நாட்டுத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டிருந்த கிருஷ்ணகுமார், குளித்துவிட்டு பள்ளிக்கு செல்ல தயாராகிக்கொண்டு இருந்த சங்ககீதாவை திட்டமிட்டு 3 முறை சுட்டாராம். அதில் இருந்து வெளியேறிய குண்டுகள் சங்கீதாவின் உடலில் பாய்ந்துள்ளது. 3 முறை சுட்டதில் சங்கீதா உடலில் மொத்தம் 29 குண்டுகள் பாய்ந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -2464000 (24 மணி நேரம்

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் – 104 (24 மணி நேரம்)