மாநகராட்சி சொத்து வரி செலுத்த இன்றும், நாளையும் சிறப்பு முகாம்

கோவை; கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணங்கள் செலுத்த, இன்றும் (மார்ச் 8), நாளையும் (மார்ச் 9) சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. காலை, 9:00 முதல் மாலை, 6:00 மணி வரை, இம்மையங்களில் வரித்தொகை செலுத்தலாம்.

கிழக்கு மண்டலம்:

வசந்தம் நகர் விநாயகர் கோவில், அசோக் நகர் பிள்ளையார் கோவில், காளப்பட்டி நேரு நகர் பஸ் ஸ்டாப் அருகில், பூங்கா நகர் விநாயகர் கோவில், ஒண்டிப்புதுார் சுங்கம் மைதானம்.

மேற்கு மண்டலம்:

வீரகேரளம் மொபைல் டீம், சீரநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவில் மைதானம்.

வடக்கு மண்டலம்:

சுப்ரமணியம்பாளையம் அங்கன்வாடி மையம், மணியகாரன்பாளையம் அம்மா உணவகம், காந்தி மாநகர் அரசு உயர்நிலைப்பள்ளி, காமதேனு நகர் சுகாதார ஆய்வாளர் அலுவலகம், ஜனதா நகர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி.

தெற்கு மண்டலம்:

குனியமுத்துார் சுகாதார ஆய்வாளர் அலுவலகம், சுண்டக்காமுத்துார் சுகாதார ஆய்வாளர் அலுவலகம், மாச்சம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதி.

மத்திய மண்டலம்:

சங்கனுார் நாராயணசாமி வீதி சிறுவர் பூங்கா, பெருமாள் கோவில் வீதி நியூ கலெக்சன் சென்டர், கெம்பட்டி காலனி ஒக்கிலியர் காலனி பள்ளி ஆகிய இடங்களில் இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.சுண்டப்பாளையம் பெருமாள் கோவில் வீதி, குனியமுத்துார் சோழன் நகரில் இன்று (8ம் தேதி) ஒரு நாள் மட்டும் முகாம் நடைபெறுகிறது.இதேபோல், நெசவாளர் காலனி மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, இடையர்பாளையம் சரவணா நகர், கவுண்டம்பாளையம் டேங்க் யூனியன் ரோடு ஆகிய இடங்களில், நாளை (9ம் தேதி) ஒரு நாள் மட்டும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.