காட்டுயானைகளை சமாளிக்க கன்டெய்னரில் ரேஷன் கடை

வால்பாறை:கோவை மாவட்டம், வால்பாறை தாலுகாவில், 27 ரேஷன் கடைகள் எஸ்டேட் பகுதியில் உள்ளன. இந்த கடைகள் அனைத்தையும் யானைகள் அடிக்கடி சேதப்படுத்தி வருவதால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமாகி வருவதோடு, மக்களுக்கு உரிய நேரத்தில் ரேஷன் பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டது.இதனால், எஸ்டேட்களில், மாதந்தோறும் திறந்தவெளியில் ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன. இந்நிலையில், கலெக்டர் உத்தரவில், ஏற்கனவே இரு இடங்களில் கன்டெய்னர் ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது.

Latest Tamil News

தற்போது, நான்கு கன்டெய்னர் ரேஷன் கடைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதால் ரேஷன் கடை ஊழியர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.வால்பாறையில், ஜூன் முதல் நவம்பர் வரை தொடர்ந்து பருவமழை பெய்யும். அப்போது, கன்டெய்னர் கடை முன்பாக, மேற்கூரை இல்லாததால் திறந்தவெளியில் நின்று ரேஷன் பொருட்களை வாங்க வேண்டிய நிலை உள்ளது. கடை முன் கூரை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.