வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கும்பாபிஷேகத்தையொட்டி, ராஜ கோபுரத்தில் இருந்து பழைய கலசங்கள் அகற்றப்பட்டது.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், கடந்த, 2013ம் ஆண்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதனையடுத்து, தற்போது, அடுத்த மாதம், 4ம் தேதி, கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. கும்பாபிஷேக பணிகளுக்காக, கடந்த, ஜனவரி மாதம், 20ம் தேதி, பாலாலயம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து கும்பாபிஷேகப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், கும்பாபிஷேகத்தை ஒட்டி, 84 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தில் உள்ள பழைய ஏழு கலசங்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்பட்டன. இதற்கு பதிலாக, புதிய கலசங்கள் பொருத்தப்பட உள்ளன.இதுகுறித்து கோவில் துணை கமிஷனர் செந்தில்குமார் கூறுகையில்,ராஜ கோபுரத்தில் உள்ள பழைய கலசங்களை அகற்றபட்டுள்ளது. விரைவில், புதிய கலசங்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.
Leave a Reply