கோவை: கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது. இங்கு விமான நிலையத்தை விரிவுபடுத்தவும், ஓடுபாதையை நீளப்படுத்தவும் ரூ.1,100 கோடி நிதி ஒதுக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து முடிந்துள்ளது. தற்போது கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கான மாஸ்டர் பிளான் தயாராகி உள்ளது. ஓடுபாதையை 12,500 அடி நீளத்துக்கு அதிகரிக்க இந்திய விமான நிலைய ஆணையம் திட்டமிட்டுள்ளது.

தமிழநாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையம் விரைவில் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. ஏனெனில் தற்போதைய நிலையில் பெரிய விமானங்கள் மற்றும் பன்னாட்டு விமானங்கள் அதிக அளவில் வந்து செல்ல முடியாத அளவிற்கு ஓடுபாதையின் நீளம் சிறியதாக உள்ளது. இதனால் கோவை வரும் பலர், சென்னை அல்லது கொச்சி வந்து. அதன்பின்னர் கோவை வரும் நிலை இருக்கிறது.தற்போதைய நிலையில் கோவை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து சென்னை, டெல்லி, மும்பை, ஹைதராபாத், ஷீரடி உள்ளிட்ட நகரங்களுக்கும், அபுதாபி, சிங்கப்பூர், ஷார்ஜா ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் உள்நாட்டிற்குள் 29 விமானங்களும், வெளிநாடுகளுக்கு 4 விமானங்களும் இயக்கப்படுகிறது.
கோவை விமானநிலையத்தை பொறுத்தவரை நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக பயணிகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இதன்படி கோவை விமான நிலையத்தை விரிவுபடுத்தவும், ஓடுபாதையை நீளப்படுத்தவும் ரூ.1,100 கோடி நிதி ஒதுக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்துவிட்டது. தற்போது விமான நிலைய விரிவாக்கத்துக்கான திட்டங்களை செயல்படுத்த விமான நிலைய ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நிலம் கையகப்படுத்தப்பட்ட பகுதியில் ரூ.29 கோடியில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டிருக்கிறது.
Leave a Reply