மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் 5 குட்டிகளுடன் காட்டு யானைகள் சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றது. வாகன ஓட்டிகள் வாகனங்களை மெதுவாக இயக்க வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல கோத்தகிரி சாலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இச்சாலையில், மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட மலைப்பாதையில், அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இதில் அடிக்கடி உணவு மற்றும் குடிநீர் தேடி காட்டு யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை, மான், கடமான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் குடியிருப்பு மற்றும் சாலைக்கு அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் வனக்கல்லூரி அருகே 5 குட்டிகளுடன் 3 காட்டு யானைகள் சாலையை கடந்து சென்றன. இதைப் பார்த்த வாகன ஓட்டிகள், வாகனங்களை நிறுத்தினர். யானைகள் சாலையை கடந்து சென்ற பின்னர் வாகனங்களை அவர்கள் இயக்கினர்.

காட்டு யானைகள் குட்டியுடன் நடமாடுவதால், வாகனங்களை மெதுவாக இயக்க வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.–
Leave a Reply