கோவை; பொதுமக்களின் அவசர தேவைக்கு உதவ, காவல்துறையில் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. 100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு, உதவி கோரலாம்.அழைப்பு வந்ததும் விரைந்து நடவடிக்கை எடுப்பதில், கோவை முதலிடம் பெற்றுள்ளது. இங்கு, அழைப்பு வந்த, 11 நிமிடம், 35 நொடிகளில், நடவடிக்கை எடுக்கப்படுகிறது.திருப்பூர் 13 நிமிடம் – இரண்டாமிடம், சென்னை தெற்கு போக்குவரத்து பிரிவு 17 நிமிடம் – மூன்றாமிடம், சேலம் 21 நிமிடம் – நான்காமிடம், நாமக்கல் 24 நிமிடம் – ஐந்தாமிடம் என, நேர இடைவெளிக்குள் மக்களின் அழைப்புகளுக்கு தீர்வு காண்கின்றன. மாநில சராசரி, 57 நிமிடமாக உள்ளது.

கோவை மாநகர போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கடந்த, 1ம் தேதி முதல், 15 வரை நடத்திய ஆய்வில் கோவைக்கு முதலிடம் கிடைத்துள்ளது. தகவல் பெற்றதும், ‘பீட்’ போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்து, தீர்வு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ‘பீட்’ போலீசாருக்கு நேரடியாக தகவல் செல்வதால், விரைந்து செயல்பட முடிகிறது’ என்றார்.
Leave a Reply