‘ஏரோபிளஸ்-2025’ கண்காட்சியில் விமானங்கள், ட்ரோன்கள், ரோபோ!
கோவை; கோவை குனியமுத்தூர் நேரு விமானவியல் கல்லூரியில், ‘ஏரோபிளஸ் 2025’ எனும் விமானவியல் கண்காட்சி, நேற்று துவங்கியது.சிறப்பு விருந்தினராக, முன்னாள் துணை அட்மிரல் தாஸ் பங்கேற்று பேசுகையில், மாணவர்கள் விமானங்களின் தொழில்நுட்பத்தை நன்கு புரிந்துகொண்டு, அதன் சிறப்புகளை ஆராய்வதில் ஆர்வம் காட்ட வேண்டும், என்றார்.என்.சி.சி. குரூப் தலைமை அலுவலக நிர்வாக அதிகாரி கர்னல் சாமி, கோவை மாநகர உதவி ஆணையர் அஜய் தங்கம் ஆகியோர் கவுரவ விருந்தினர்களாக பங்கேற்றனர். நேரு கல்வி குழுமங்களின் தலைவர் கிருஷ்ணதாஸ், தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார், டீன் பாலாஜி, செயல் இயக்குனர் நாகராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இக்கண்காட்சியில், விமானங்கள், ட்ரோன்கள், ரோபோடிக்ஸ், விமானப் பணியில் ஈடுபடும் பெண்களின் அணிவகுப்பு, 10க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள், 80 நிமிடங்களில் உலகத்தை சுற்றி பார்க்கும் கண்காட்சி, சிமுலேட்டர் இயந்திரம் உதவியுடன் விமான இயக்கம் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
புதிதாக துவங்கப்பட்ட ‘கேபின் க்ரூ’ பாடத்திட்டம் தொடர்பான விரிவான விளக்கங்களும் வழங்கப்படுகிறது. இக்கண்காட்சியை காண, பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை, இலவச அனுமதி வழங்கப்படுகிறது.
Leave a Reply