கோவை; புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கையில், செயற்கை மூட்டுக்கிண்ணத்தை கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் வெற்றிகரமாக பொருத்தினர்.திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை மூங்கில்தொழுவை சேர்ந்தவர் ஈஸ்வரன், 57. இவருக்கு கடந்த ஒன்றரை மாதங்களாக இடது தோள்பட்டையில் வீக்கம், வலி இருந்தது. கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பரிசோதனையில், அவருக்கு உணவுக்குழாயில் ‘ஸ்குவோமாஸ் செல் கார்சினோமா’ எனும் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிந்தது. இதனால் அவரது இடது தோள்பட்டை பந்து கிண்ணமூட்டு முற்றிலும் அரிக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட பகுதியில் ரத்தநாளங்கள், நரம்புகள் நல்ல நிலையில் செயல்பட்டதால், கையை காப்பாற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

மருத்துவமனை எலும்பு, மூட்டு துறை இயக்குனர் வெற்றிவேல்செழியன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
அறுவை சிகிச்சையில், செயற்கை மூட்டுக்கிண்ணம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. நோயாளி உடல்நம் தேறி வருகிறார். அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த டாக்டர் குழுவினரை, மருத்துவமனை டீன் கீதாஞ்சலி பாராட்டினார்.
Leave a Reply