கோவை: எட்டிமடை அம்ருதா வித்யாலயம் பள்ளியின் இரண்டாம் வகுப்பு மாணவன் விகாஸ், ஆசிய அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான நீச்சல் போட்டிகளில் பங்கேற்று, தனிநபர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.ஆசிய அளவில் நடைபெற்ற இப்போட்டியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த இளம் நீச்சல் வீரர்களுடன் போட்டியிட்டு, விகாஸ் மொத்தம் ஏழு பதக்கங்களையும், தனி நபர் சாம்பியன் பட்டத்தையும் பெற்றுள்ளார். இதில், ஐந்து தங்கப்பதக்கங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி மேலாளர் சுவாமி முத்தாம்ருத பிராணஜி, மாணவன் விகாஸ், பெற்றோர் அசோக்குமார் மற்றும் காயத்ரி, நீச்சல் பயிற்சியாளர் குமார் ஆகியோரை பாராட்டினார்.
Leave a Reply