மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் தர்ப்பூசணி பழங்களை ருசித்த காட்டு யானை பாகுபலி!

கோவை மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் சாலையோரம் உள்ள தர்ப்பூசணி கடையில் ஒற்றை காட்டு யானை பாகுபலி பழங்களை ருசி பார்த்தது. இந்த யானையை பட்டாசு வெடித்து வனத்துறையினர் காட்டிற்குள் விரட்டினர்.

wild elephant

மேட்டுப்பாளையம் வனத் துறை
இந்த சம்பவம் தொடர்பாக, மேட்டுப்பாளையம் வனத் துறைக்கு தகவல் வழங்கப்பட்டதன் மூலம், வனத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து பட்டாசு வெடித்து, காட்டு யானையை வனத்திற்குள் விரட்டினர்.
சமூக வலைத் தளங்களில் வைரலான வீடியோ
பாகுபலி யானை கடையில் தர்ப் பூசணி எடுத்து சாப்பிடும் காட்சி, தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.