இ ன்று உலகம் மாறி வருகிறது. ஒரு பக்கம் பிடித்த வேலை கிடைக்கவில்லை; மறுபக்கம் கிடைத்த வேலை பிடிக்கவில்லை.என்ன செய்தால், எதை பிடித்துக் கொண்டால், எப்படி மாறினால், தொடர்ந்து இயங்க முடியும் என சொல்கிறார், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குனர் கருணாகரன்.

யோகாசனம்
இன்று, உடல் உழைப்பு பெருமளவு குறைந்து விட்டது. உணவு பழக்கவழக்கங்களும் பெருமளவு மாறிவிட்டது. கல்லுாரியில் படிக்கும் காலத்திலேயே உடற்பயிற்சி, யோகா, தியானம், நல்ல உணவு பழக்கவழக்கம் ஆகியவற்றை கடைப்பிடிப்பது வலிமை தருவதுடன், விரும்பும் வேலையை பெறவும் உதவும். யோகா மற்றும் தியானம் நமது வாழ்க்கையை சிறப்பாக வாழ வாழ்நாள் முழுவதும் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்று. யோகக் கலையை தக்க ஆசிரியரின் வழிகாட்டுதல் இன்றி செய்யக்கூடாது.
உணர்ச்சி அறிவாற்றல்பணிச்சூழல் மற்றும் பணியின் தன்மைகளில் மாற்றங்கள், மிக வேகமாக நடந்து வருகிறது. இந்த மாற்றங்களை சமாளிப்பதற்கும், தொடர்கற்றல் வாயிலாகவும் தங்களை தகுதிப்படுத்திக் கொள்வதற்கும், உளவியல் ரீதியான மீள்தன்மை (Psychological Resilience) அவசியம். உங்களது நுண்ணறிவு, தொழில் சார்ந்த அறிவு, தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றுடன் உணர்ச்சி அறிவாற்றலை வளர்த்துக் கொண்டால், பணியில் நட்சத்திர பணியாளராக ஜொலிக்க முடியும். ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டிய, மிக முக்கியமான திறன்களில், எமோஷனல் இன்டலிஜென்ஸ் முதலிடம் பெறட்டும்.
திறனின்றி அமையாது பணிவாழ்வு
ஒவ்வொரு நாளும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம், மாறிவரும் பணிச்சூழலில், புதிய வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்கள் அறிந்திருத்தல் நல்லது. தேர்ந்தெடுக்கவுள்ள துறையில் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள், கற்றுக் கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்கள் ஆகியவை குறித்து நன்கு புரிந்து கொண்டால், பயணிக்க வேண்டிய பாதைத் தெளிவாக புலப்படும்.ஒரு குறிப்பிட்ட திறனை கற்றுக்கொண்டு, அதன் வாயிலாக, பணியில் சேர்ந்து வாழ்நாள் முழுவதும் அதே பணியில் நீடித்திருக்க முடியாது.
‘அப்டேட்’ இல்லை… ‘அவுட்’
உலகப் பொருளாதார அமைப்பான வேர்ல்டு எகனாமிக் போரம், வெளியிட்டுள்ள Future of Jobs Report 2025′ ஆய்வறிக்கையின் படி, அடுத்த 5 ஆண்டுகளில், 11 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாகும். 9 மில்லியன் பணிகளின் தன்மை முற்றிலுமாக மாற்றம் காணும். 5 மில்லியன் பணியிடங்கள் இல்லாதொழியும். ஆனால், அதிகரித்து வரும் டிஜிட்டல் பயன்பாடு, செயற்கை நுண்ணறிவு மேம்பாடு மற்றும் தகவல் செயலாக்கம் (Information Processing), ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவை முக்கிய காரணிகளாக விளங்கும் என, இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. எதிர்காலத்தில் ஒருவர் தனது வாழ்க்கையில், ஐந்துக்கும் மேற்பட்ட பணிகளுக்கு மாறும் சூழல் நிலவக்கூடும். அதற்குத் தேவையான திறன்களை, தகுதிகளை வளர்த்துக் கொண்டே இருந்தால் தான் பணியில் நீடித்திருக்க முடியும்.
Leave a Reply