மதுவுக்கு அடிமையாகும் பெற்றோரால் பாழாகிறது குழந்தைகளின் படிப்பு; ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் குமுறல்

கோவை; அதிகரித்து வரும் குடிப்பழக்கம் போன்ற சமூக சூழல்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் கல்வியை, கடுமையாக பாதிக்கிறது.குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் குடும்ப பின்னணியில் இருந்து வரும், பல ஆயிரம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் கல்வி கற்கின்றனர்.

ஆனால், குடும்ப மற்றும் சமூகச் சூழல் அழுத்தம் காரணமாக இவர்களில் சிலர், படிப்பை தொடர்வது கேள்விக்குறியாகிறது. குறிப்பாக, குடிப்பழக்கத்தால் தந்தையை இழந்த மாணவர்கள், படிப்பை பாதியில் நிறுத்துவது அதிகரித்து வருகிறது.

கல்வியில் சிக்கல் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘கடந்த ஒரு மாதத்தில் மட்டும், எங்கள் பள்ளியில் நான்கு மாணவர்களின் தந்தைகள், குடிப்பழக்கத்தால் உயிரிழந்தனர். இதனால், அந்த மாணவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால், மாற்று சான்றிதழ் பெற்று சென்றுவிட்டனர்’ என்றார்.

குடிப்பழக்கத்தின் தாக்கம், குழந்தைகளின் நடத்தையிலும் வெளிப்படுவதாக குறிப்பிடும் ஆசிரியர்கள், ‘குடிப்பழக்கம் கொண்ட தந்தை மற்றும் முறையான குடும்ப கட்டமைப்பு இல்லாத சூழலில் வளரும் குழந்தைகள், தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. சிலர் ‘கூல் லிப்’ போதைக்கு அடிமையாகின்றனர்.
இதை கண்டித்தாலும், சிலர் பள்ளி வளாகத்திற்குள் ஒழுக்கமாக நடந்து கொள்கிறார்கள். ஆனால், பலர் பள்ளிக்கு வெளியே, சமூகச் சூழல்களின் காரணமாக, தவறான பாதைக்குத் தள்ளப்படுகின்றனர். பெற்றோர்களும் அவர்களை கண்டிப்பதில்லை’ என்கின்றனர்.

குடும்பமும் கல்வியும் டாஸ்மாக் மதுக்கடைகள் அதிகரித்திருப்பது, குடிக்கு அடிமையாவோரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கிறது. இது குடும்ப பொருளாதாரத்தையும், குடும்பக் கட்டமைப்பையும் நேரடியாக பாதிக்கிறது. அதன் மறைமுக விளைவாக, குழந்தைகளின் பாடம் படிக்கும் திறன் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

பாடம் படிக்கும் திறனை மேம்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், சமூகத்தில் குடிப்பழக்கம் அதிகரித்து வருவது, ஒரு பெரும் சவாலாக உள்ளது. மாணவர்களின் கல்விக்கு இடையூறாகவும் உள்ளது’ என, சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குடிப்பழக்கத்தின் தாக்கம், குழந்தைகளின் நடத்தையிலும் வெளிப்படுவதாக குறிப்பிடும் ஆசிரியர்கள், ‘குடிப்பழக்கம் கொண்ட தந்தை மற்றும் முறையான குடும்ப கட்டமைப்பு இல்லாத சூழலில் வளரும் குழந்தைகள், தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. சிலர் ‘கூல் லிப்’ போதைக்கு அடிமையாகின்றனர்.

டாஸ்மாக் மதுக்கடைகள் அதிகரித்திருப்பது, குடிக்கு அடிமையாவோரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கிறது. இது குடும்ப பொருளாதாரத்தையும், குடும்பக் கட்டமைப்பையும் நேரடியாக பாதிக்கிறது. அதன் மறைமுக விளைவாக, குழந்தைகளின் பாடம் படிக்கும் திறன் கடுமையாக பாதிக்கப்படுகிறது.