கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் வசிக்கும் ஒருவர் எக்குஸ்டீல் டிரேடிங் வர்த்தகம் மற்றும் உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்கடந்த 07.11.2024 அன்று அவரது கம்பெனிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக டிரேட் இந்தியா இணையதளம் மூலம் ஸ்ரீ முருகப்பா ஸ்டீல் & ஹார்டுவேர் என்ற நிறுவனத்தை தொடர்பு கொண்டு ரூபாய் 14 லட்சத்து, 72 ஆயிரத்து, 263 பணம் செலுத்தியுள்ளார். அதன் பிறகு புகார்தாரர் தான் மோசடி செய்யப்பட்டு பணத்தை இழந்ததை அறிந்துள்ளார்.
இந்நிலையில் மேற்படி பணத்தை இழந்த நபர் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் 08.03.2025 அன்றுகொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். கார்த்திகேயன் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன் பேரில், மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளியை கண்டுபிடிக்க மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் மேற்கொண்ட புலன் விசாரணையில் சென்னையைச் சேர்ந்த சந்திரசேகர் (43) என்பவர் மேற்படி வழக்கில் ஈடுபட்டது தெரியவந்து. இந்நிலையில் மேற்படி எதிரியை சைபர் கிரைம் காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். இவர் தமிழ்நாட்டில் (மதுரை மற்றும் ஈரோடு), ஹரியானா, பெங்களூர், மும்பை மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஆன்லைன் மூலம் வர்த்தக மோசடி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளதும் பல்வேறு மாநிலங்களில் சைபர் கிரைம் காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. இவரது வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. மேற்படி எதிரியிடமிருந்து மோசடிக்கு பயன்படுத்த லேப்டாப்கள், செல்போன்கள் மற்றும் வங்கி பாஸ்புக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..
Leave a Reply