பெ.நா.பாளையம்; காரமடை அருகே நடந்த பாலியல் புகாருக்கு, இன்ஜினியரிங் கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
கோவை மாவட்டம், காரமடை அருகே ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங் கல்லூரியில் பணியாற்றி வந்த பெண்ணுக்கு, அதே கல்லூரி சி.இ.ஓ., பிரசன்னன்,39. பாலியல் தொல்லை தந்ததாக பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இது குறித்து, காரமடை ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங் கல்லூரி மனிதவள மேம்பாட்டு மேலாளர் மனோகரன் கூறுகையில்,”குறிப்பிட்ட பெண்ணின் கணவர் கல்லுாரியில் ‘ஏசி’ பராமரிப்பு பணியை செய்து வந்தார். சமீப காலமாக அவருக்கு பணி ஒதுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண், அவரின் கணவர் ஆகியோர் காரமடை டீச்சர்ஸ் காலனியில் உள்ள பிரசன்னன் வீட்டு கார், ஸ்கூட்டர், கதவை அடித்து உடைத்தனர். இது தொடர்பாக காரமடை போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனால் கோபமடைந்த பெண், அவரின் கணவர், பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் போலீசில் பிரசன்னன் மீது பொய் புகார் அளித்தனர். குறிப்பிட்ட நாளில் பாலியல் தொல்லை சம்பவங்கள் நடைபெறவில்லை என்பதற்கான ‘சிசிடிவி’ பதிவுகள் உள்ளன” என்றார்.
Leave a Reply