கோவை; ‘கோவையில், 6 முதல், 14 வரை வெப்பச்சலன மழை பெய்ய வாய்ப்புள்ளது’ என, வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன் கூறியுள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:

கொங்கு மண்டலத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வரும் நாட்களில் வெப்ப சலன மழை எதிர்பார்க்கலாம். 6 முதல், 14 வரை அனைத்து பகுதிகளிலும் கன மழைக்கு வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக, 6 முதல் 10 வரை காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக, கிழக்கு திசை காற்றால் கொங்கு மண்டலத்தில் பாலக்காடு கணவாய் பகுதியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சில இடங்கள், மாநகராட்சி பகுதிகள், 5ம் தேதிக்கு பின் மழைக்கு வாய்ப்பிருக்கிறது. படிப்படியாகவே மழை அதிகரிக்கும்; வெப்பச்சலன மழை என்பதால் சில இடங்களில் பெய்யாமல் இருக்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
சிறுவாணிக்கு நீர் வரத்து
சிறுவாணி அணை பகுதியில் நேற்று மழை இல்லை. இருந்தாலும் சிற்றருவிகளில் நீர் வரத்து காணப்படுவதால், 40.44 அடியாக நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது. அடர்ந்த வனப்பகுதியில் வீர காளியம்மன் கோவில் பகுதியில் உள்ள, 1,000 எம்.எம்., விட்டமுள்ள பிரதான குழாயில் ஏற்பட்டுள்ள கசிவை சரி செய்யும் பணி நேற்று நடந்தது. அதனால், 5.94 கோடி லிட்டர் தண்ணீர் தருவிக்கப்பட்டு, கோவை மக்களுக்கு சப்ளை செய்யப்பட்டது.
Leave a Reply