கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரியின் பட்டமளிப்பு விழா

கோவை : கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரியின் 18வது பட்டமளிப்பு விழா, கல்லுாரி கலையரங்கில் நடந்தது.இஸ்ரோ முன்னாள் தலைவரும், விண்வெளிக் குழுவின் உறுப்பினருமான கிரண்குமார் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.அவர் பேசுகையில், ”2035ம் ஆண்டு இந்தியாவின் விண்வெளி நிலையம் அமையும். சவால்களை எதிர்கொள்ளாமல், சாதனைகளைச் செய்ய முடியாது. தோல்வி ஏற்படும் போது, அதற்கான காரணத்தையும் அதிலிருந்து மீள்வதற்கான வழியையும், ஆராய்ந்தால் வெற்றி நிச்சயம், ” என்றார். இளநிலை பட்டதாரிகள் 834 பேருக்கும் முதுநிலை பட்டதாரிகள் 211 பேருக்கும் சிறப்பு விருந்தினர் பட்டங்களை வழங்கினார். தரவரிசையில் இடம்பெற்ற 12 பட்டதாரிகள் கவுரவிக்கப்பட்டனர்.

கல்லுாரியின் செயலர் மற்றும் இயக்குனர் வாசுகி, கல்லுாரியின் முதல்வர் சங்கீதா, பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.