கோவை; கோவையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல, போதுமான ரயில்கள் இல்லை எனவும், கூடுதல் ரயில்களை இயக்கவும், கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
கொரோனா கால கட்டத்தில், கோவையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கும், இயக்கப்பட்ட ரயில்கள் நிறுத்தப்பட்டன. கொரோனா பாதிப்பு முடிந்து விட்ட நிலையில், நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்குவதில், ரயில்வே நிர்வாகம் சுணக்கம் காட்டி வருவதாக, ரயில்வே ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க, கோரிக்கை விடப்பட்டு வருகிறது. கோரிக்கைகளை ஏற்று, படிப்படியாக ரயில்களை இயக்கத் துவங்கியுள்ளது ரயில்வே நிர்வாகம்.
இதன் ஒரு பகுதியாக, போத்தனுாரில் இருந்து சென்னை சென்ட்ரல், தாம்பரத்துக்கு இரு ரயில்களை சிறப்பு ரயில்களாக, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதவிர, நிறுத்தப்பட்ட மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி வாராந்திர ரயிலும், மீண்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களை, நிரந்தரமாக இயக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது, தென்மாவட்டங்களில் உள்ள ஆன்மிக தலங்களுக்கு செல்வோருக்கு, மிகவும் பயனுள்ளதாக அமையும். ரயில்வே நிர்வாகம் இதைக்கருத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர் ரயில் பயணிகள்.
Leave a Reply