ஸ்ரீ ஈஸ்வர் டிரோன் டெக் சார்பில் டிரோன் பயிற்சி

கோவை, ; ஸ்ரீ ஈஸ்வர் டிரோன் டெக் நிறுவனம் சார்பில், டிரோன் பைலட் உரிமம் பெற பயிற்சி அளிக்கப்படுகிறது.ஐந்து நாட்கள் பயிற்சியில், செயல்முறை விளக்கத்துடன் நான்கரை மணி நேரம் சுயமாக, டிரோன் இயக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெறுபவர்களுக்கு விமான போக்குவரத்து துறையின் அங்கீகாரத்துடன், 10 ஆண்டுகளுக்கான டிரோன் பைலட் உரிமம் வழங்கப்படுகிறது. இதில். தமிழ்நாடு போலீஸ் துறையின் போலீசார் பயிற்சி பெற்றனர்.

Latest Tamil News

டிரோன் செயல்பாட்டில், போலீசார் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை சிறப்பு பயிற்சியாக வழங்கப்பட்டது. இவர்களுக்கு டிரோன் பைலட் உரிமத்தை, எஸ்.பி., கார்த்திகேயன் வழங்கினார்.

ஸ்ரீ ஈஸ்வர் டிரோன் டெக் நிறுவனத்தின் அக்கவுண்டபிள் மேலாளர் லெப்டினென்ட் மெஹபூப், தலைமை பயிற்சியாளர் வேணுகோபால், பயிற்சியாளர் சம்பத்குமார் பங்கேற்றனர்.