முன்னாள் கேப்டன் தோனி கோவை வந்தார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கோவை வந்தார்.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் மகேந்திர சிங் தோனி. ஐ.பி.எல்., போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பராக இருந்து வருகிறார்.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று சென்னையில் இருந்து விமானத்தில் மதியம், 1:10 மணிக்கு தோனி கோவை வந்தார்.தகவல் அறிந்த, 200க்கும் மேற்பட்ட ரசிகர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர். ரசிகர்கள் ‘தல, தலை மாஹி’ என கோஷமிட்டனர். தொடர்ந்து ரசிகர்கள் சிலர் முண்டியடித்துக் கொண்டு தோனியுடன் ‘செல்பி’ எடுக்க முயன்றனர். இதையடுத்து அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அங்கிருந்து காரில் புறப்பட்ட தோனி ரசிகர்களை பார்த்து கையசைப்படியே சென்றார்.அங்கிருந்து நிகழ்ச்சி நடந்த ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு சென்றார். தனியார் ஷோரூம் துவக்க விழாவில் பங்கேற்ற பின் கோவைபுதுார் பகுதியில் தங்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.