கிராம சபை கூட்டம்: கலெக்டர் பங்கேற்பு

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, நெ.10.முத்தூரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கோவை கலெக்டர் பங்கேற்றார்.கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள, 34 ஊராட்சிகளில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், நெ.10.முத்தூர் நடுநிலைப்பள்ளியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் பங்கேற்றார்.

கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சங்கேத் பல்வத் வாகே, பொள்ளாச்சி சப்-கலெக்டர் ராமகிருஷ்ணசாமி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். ஊராட்சி செயலாளர் அனிதா தீர்மானங்களை படித்தார். எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கப்பட்டது.
ஊராட்சியின் வரவு, செலவு அறிக்கை, வளர்ச்சி பணிகள் குறித்த விபரங்கள் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பின், நடப்பாண்டில் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட பணிகள் குறித்தும், அரசு திட்டங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

கலெக்டர் பேசுகையில், ”வீடுகளில் சோலார் பேனல் அமைத்து மின் கட்டணத்தையும், மின்சார பயன்பாட்டையும் குறைக்க வேண்டும். அரசு திட்டங்களை மக்களுக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்றார்.

கூட்டத்தில் பங்கேற்ற மக்கள், கலெக்டரிடம் மனு அளித்தனர்.