கோவை: கோவை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் வரும் என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார். இதனால் கோவை மாவட்ட மக்கள் ஆர்வத்துடன் பட்ஜெட்டை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். கோவை மாவட்டம் என்பது தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் மாவட்டம் ஆகும். சென்னையை போல் இங்கும் ஐடி தொழிற்சாலைகள் உள்ளன. மேலும் தொழில் தொடங்கவும் ஏற்ற இடம் இது. மேற்கு தொடர்ச்சி மலைக்கு கொஞ்சம் அருகே இருப்பதால் அந்த பகுதியின் வானிலை வித்தியாசமாக இருக்கும். அதாவது வெயில் என்பது அந்தளவுக்கு தெரியாது. கோடை வெயிலில் கூட வெயில் இருந்தாலும் புழுக்கம் தெரியாது. மாலைக்கு மேல் ஜில் ஜில் என காற்று வரும். அதிலும் புறநகர் பகுதிகளில் கேட்கவே தேவையில்லை. மேலும் கேரள எல்லையில் இருக்கும் பகுதிகள் எல்லாம் அட்டகாசமாக இருக்கும். எனவே இந்த இடத்தில் வசிக்கும் மக்கள் பரபரப்பான இடமான சென்னைக்கு வர மாட்டார்கள். அப்படிப்பட்ட கோவை மாவட்டத்தில் தொழில் நிமித்தமாக வட இந்தியர்கள், தென் தமிழகம், வட தமிழகத்தை சேர்ந்தவர்கள், தென்னிந்தியர்கள் என வசித்து வருகிறார்கள். எந்த ஊராக இருந்தாலும் அங்கு சாலை போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் இருந்தால் மட்டுமே அவை வளர்ந்ததாக கருதப்படும். அந்த வகையில் இந்த முறை பட்ஜெட்டில் கோவைக்கு நிறைய அறிவிப்புகள் வர போகின்றன என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோவையில் இயற்கையை பேணி பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. அதில் முக்கியமாக நீர் நிலைகள் எந்த காரணத்தை கொண்டும் மாசடைய விடக் கூடாது. மலைகள் சூழ்ந்திருப்பதால் குளங்கள் நிறைய உள்ளன. அவற்றை பாதுகாத்து பயன்படுத்த வேண்டும். அதுவே நிலத்தடி நீர் உருவாவதற்கு அடிப்படையே நீராதாரங்கள். மகிழ்ச்சி பட்ஜெட்: குடிநீர், சுகாதாரம், சாலை போக்குவரத்து, மருத்துவம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். இவை தொடர்ந்து கண்காணிக்கப்படும். மக்கள் நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். கோவை மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் ஏராளமான அறிவிப்புகள் பட்ஜெட்டில் வரும்.
Leave a Reply