சாதனை ‘ரத்தினங்களை’ பாராட்டி கவுரவம்

கோவை, : ரத்தினம் கல்விக் குழும நிறுவனங்கள் சார்பில், பல்துறை பெண்களின் சாதனைகளை கவுரவிக்கும் வகையில், சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.விழாவிற்கு, ரத்தினம் குழும இயக்குனர் ஷிமா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சி.ஆர்.பி.எப்., துணைத் தளபதி ஜின்சி பிலிப் கலந்துகொண்டார். வணிகம், கல்வி, விளையாட்டு மற்றும் சமூக சேவை போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பெண்களுக்கு, விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Latest Tamil News

மூத்த பிசியோதெரபிஸ்ட் திவ்யா, அபிராமி மருத்துவமனை மற்றும் ஹெல்த்கேர் நிறுவனங்கள் நிறுவனர் குந்தவி, 87 வயதில் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை வசந்தா, யாஸ்மின், அனுக்ரஹா, மீனாட்சி சாகர் ஆகியோர் விருதுகள் பெற்றனர்.கோவை மாவட்ட ஆட்சியர் தனி உதவியாளர் (பொது) நிறைமதி, இன்னர் வீல் கிளப் மாவட்ட இயக்குனர் ராம்யா ஆகியோர் சிறப்புரையாற்றினர். ரத்தினம் குழும நிறுவனங்களின் பெண் ஊழியர்கள் நடனம், பேஷன் ஷோ மற்றும் விளையாட்டுகள் மூலம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.