ஆதார விலை சட்டத்தை அமல்படுத்துங்க! உழவர் தியாகிகள் தின மாநாட்டில் தீர்மானம்

தொண்டாமுத்துார் : சம்யுக்த கிசன் மோர்ச்சா மற்றும் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் இணைந்து நடத்திய, உழவர் தியாகிகள் தின மாநாடு, பேரூரில் நேற்று நடந்தது. பேரூர் செட்டிபாளையம் பஸ் ஸ்டாப் அருகில், சங்க கொடியேற்றி, பேரூரில் உள்ள மண்டபத்துக்கு விவசாயிகள் ஊர்வலமாக வந்தனர்.நாராயணசாமி நாயுடு விவசாய சங்க மாநில தலைவர் பாபு தலைமை வகித்தார். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாண்டியன், சம்யுக்த கிசன் மோர்ச்சா தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெக்ஜித் சிங் தல்வேவால், இணை ஒருங்கிணைப்பாளர்கள் பல்தேவ்சிங் கிர்சா, சதனம்சிங் பெஹிரு, தமிழக தலைவர் அய்யாக்கண்ணு ஆகியோர் பேசினர்.’மத்திய அரசு, குறைந்த பட்ச ஆதார விலை சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஆற்றில் கலப்பதை தடை செய்ய வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.