குழந்தைகளுக்கு ‘ஸ்னாக்ஸ்’ வாங்கும் முன் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!

கடைகளுக்கு செல்லும் நாம், பிள்ளைகளுக்கு என்ன பிடிக்கும் என்று பொருட்களை பார்த்து வாங்குகின்றோம். ஆனால், காலாவதி தேதி, எம்.ஆர்.பி., பார்ப்பதில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, ஊட்டச்சத்து லேபிளிங்கை பார்ப்பதில் இல்லை என்று வருந்துகின்றனர் மருத்துவர்கள்.பி.எஸ்.ஜி. மருத்துவ மற்றும் ஆராய்ச்சி பிரிவு சார்பில், 600 மருத்துவ மாணவர்கள் கேன்டீன், கடைகளில் பொருட்களை வாங்கும் பொழுது, எவ்வாறு வாங்குகின்றனர் என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வில், லேபிள் பார்த்து பொருட்கள் வாங்கும் பழக்கம் பெரும்பாலும் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. இது குறித்து, விழிப்புணர்வு ஆராய்ச்சி கட்டுரையும் வெளியிடப்பட்டுள்ளது.

பி.எஸ்.ஜி. மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி ஆராய்ச்சி பிரிவு இயக்குனர் டாக்டர் சுதா ராமலிங்கம், இது குறித்து நம்மிடம் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டதாவது:

*பேக் செய்யப்பட்ட உணவு பொருட்களில், கட்டாயம் ஊட்டச்சத்து விபரங்கள் அடங்கிய லேபிள் சரியாக பார்த்து வாங்க வேண்டும். ஒவ்வொரு பொருட்களிலும் உண்ணும் அளவு (Serving Size) குறிப்பபிடப்பட்டிருக்கும்.

உதாரணத்துக்கு, ஒரு சிப்ஸ் பாக்கெட்டில் ஒரு கிலோ சிப்ஸ் உள்ளது; நாம் ஒரு தடவை உண்ணும் போது, அதில் 50 கிராம் சாப்பிடுகிறோம் என்றால், அது ஒரு ‘சர்விங் லிமிட்’.

இதில் தயாரிக்க பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் எவ்வளவு உள்ளது என்பதை கவனிக்க வேண்டும்.

சர்க்கரை, சோடியம், டிரான்ஸ் பேட் (trans fat) எனப்படும் கெட்ட கொழுப்பு, கார்ப்போஹைட்ரேட்ஸ், அனைத்தும் எவ்வளவு சேர்க்கப்படுகிறது என்பது முக்கியம்.ஏடேட் சுகர் ( added sugar), சின்தடிக் கலர்ஸ், சோடியம், பிரீசர்வ்டிவ்ஸ் அதிகம் உள்ளவற்றை தவிர்க்க வேண்டியது அவசியம்.

* லேபிளில் எந்த பொருள் அதிகளவில் உள்ளதோ, அதுவே முதலில் வைத்து வரிசையாக பட்டியல் செய்வார்கள். சர்க்கரை, சோடியம் போன்றவை முதலில் இருந்தால், கண்னை மூடி தவிர்த்துவிடுங்கள்.

* உயர் புரோட்டின் சத்து, நார்சத்து, 100 சதவீதம் இயற்கை, இதை குடித்தால் எலும்பு பலமாகும், உயரமாவோம் என விளம்பரம் செய்கிறார்கள். அதை நம்பி வாங்காமல் லேபிளில் என்ன உள்ளது என பார்க்க வேண்டும்.

* தற்போது சந்தையில் உள்ள பிஸ்கட், சிப்ஸ், ஜூஸ் பெரும்பாலும் உடல் நலனுக்கு ஏற்றவை இல்லை. அதைதான் நாம் பிள்ளைகளுக்கு தொடர்ந்து வாங்கித்தருகிறோம்.

* பிரிசர்வேட்டிவ்ஸ் பொதுவாக நம்பர்களில் குறியீடாக கொடுத்து இருப்பார்கள். பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரீசர்வேடிவ்ஸ் இந்தியாவில் எளிதாக சேர்க்கப்படுகிறது. பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்.

வீட்டில் நாம் தயாரிக்கும் கோதுமை மாவுக்கும், கடைகளில் கிடைப்பதற்கும் பளபளப்பு சற்று அதிகமாக இருக்கும். அது பிராசஸ்டு, அல்ட்ரா பிராசஸ்டு செய்யப்பட்டவை. லேபிள்களை சரியாக பார்த்து வாங்கவேண்டும்.அதில் சேர்க்கப்பட்ட பொருட்கள், அந்த பொருட்களில் உள்ள தன்மை அனைத்தும் கவனிக்கவேண்டும். இது போல் பார்த்து வாங்கி உண்ண, பிள்ளைகளையும் பழக்க வேண்டும்.

புரோட்டீன், நார்ச்சத்து போன்ற நுண் ஊட்டசத்துக்கள் இல்லை என்றாலும், குறைந்த அளவில் கூட அந்த உணவு பொருட்களை தவிர்த்துவிடுவது நல்லது.

தற்போது சந்தையில் உள்ள பிஸ்கட், சிப்ஸ், ஜூஸ் பெரும்பாலும் உடல் நலனுக்கு ஏற்றவை இல்லை. அதைதான் நாம் பிள்ளைகளுக்கு தொடர்ந்து வாங்கித்தருகிறோம்.