‘உடற்பயிற்சி, தூக்கம் இல்லை என்றால் மனநலம் பாதிக்கும்’

மேட்டுப்பாளையம்: உணவு, உடற்பயிற்சி, தூக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தவில்லை என்றால் மனநல பாதிப்புகள் ஏற்படும் என, ஹோமியோபதி பிரிவு அரசு உதவி மருத்துவர் ஜெயஸ்ரீ மீனாட்சி கூறுகிறார்.

Latest Tamil News

எல்லா வியாதிகளுக்கும் மனநலம் பாதிக்கப்படுவது முக்கிய காரணமாக உள்ளது. எப்போதும் நாம் மனநலத்தை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். தற்போதைய காலகட்டத்தில், அதிக வேலை, தொழில் போட்டிகள் போன்றவைகள் காரணமாக, தூக்கம் இன்றி பணி புரிகிறார்கள். உணவின் மீது கவனம் இல்லாமல் நல்ல உணவுகளை சாப்பிடாமலும், நேரத்திற்கு சாப்பிடாமலும் காலம் நேரம் பார்க்காமல் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் தூக்கமின்மை ஏற்படும். அது மனநல பாதிப்புகளை அதிகம் உண்டாக்கும். இதனால் உடல் பாதிக்கப்படும். உடல் பருமன் கூடும், இதய பாதிப்புகள் ஏற்படுகிறது. மன அழுத்தம், மனச்சிதைவு உள்ளிட்ட அனைத்து விதமான மன நலம் பாதிப்புகளுக்கும் ஹோமியோபதியில் சிறந்த மருந்துகள் உள்ளன. உடற்பயிற்சி, தியானம், போன்றவற்றிக்கு தற்போது மக்கள் முக்கியம் கொடுத்து வருகிறார்கள். உடற்பயிற்சி, யோகா, தியானம் செய்யும் போது சந்தோஷம் தரும் ஹார்மோன்கள் நம் உடம்பில் சுரக்கின்றன. டோபமைன் போன்ற சந்தோஷத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் சுரக்க வேண்டும் என்றால் யோகா, தியானம், உடற்பயிற்சி மிகவும் முக்கியம்.

இவ்வாறு அவர் கூறினார்.—-