வால்பாறை:கோவை மாவட்டம், வால்பாறை நகர், ரொட்டிக்கடை, புதுத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. ரொட்டிக்கடை பகுதியில், செல்வக்குமார் என்பவரின் வீட்டின் முன், நேற்று முன்தினம் மாலை, அவரது குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, புதரில் மறைந்திருந்த சிறுத்தை வீட்டுவாசலுக்கு வந்து பதுங்கியது. இதைக்கண்ட வளர்ப்பு நாய் குரைத்ததால், குழந்தைகள் சுதாரித்து வீட்டிற்குள் ஓடி தப்பினர்.நாய் தொடர்ந்து குரைத்ததால், சிறுத்தை தலைதெறித்து ஓடியது. இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Leave a Reply