லிமிடெட் எடிஷனின் கண்காட்சி விற்பனை

கோவை; லிமிடெட் எடிஷனின் கண்காட்சி, விற்பனை இரண்டு நாட்கள் நடக்கிறது.பேஷனிஸ்டா குழுமத்தின், லிமிடெட் பதிப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கண்காட்சி மற்றும் விற்பனையை நடத்தி வருகிறது. சுற்றுசூழலை மாசுபடுத்தாத ஆர்கானிக் மற்றும் உள்நாட்டு தயாரிப்புகளை காட்சிபடுத்துவதற்காக, இந்த கண்காட்சி, விற்பனையை நடத்துகிறது.

நிலையான பேஷன் மற்றும் வாழ்க்கை முறைக்கான பிரத்யேக ஆடைகளை லிமிடெட் பதிப்பு காட்சிபடுத்துகிறது.

Vivanta Coimbatore, Coimbatore (updated prices 2025)

ரேஸ்கோர்ஸ் தாஜ் விவாந்தாவில் நாளையும், நாளை மறுதினம் இரு தினங்கள் கண்காட்சி, விற்பனை நடக்கிறது.

கோல்கட்டா, புனே, சென்னை, பொள்ளாச்சி, பாலக்காடு, கரூர், பெரம்பலூர், தூத்துக்குடி, மைசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, விற்பனையாளர்கள் பங்கேற்கின்றனர்.