மேட்டுப்பாளையம்; காரமடை அருகே மங்கலக்கரை புதுார் கிராமத்தில் தரமற்ற முறையில் பேட்ச் ஒர்க் செய்யப்பட்ட சாலைகளால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.காரமடை நகராட்சியில் மங்கலக்கரை புதுார் முதல் கோடதாசனுார் வரை உள்ள சாலைகள் சேதம் அடைந்துள்ளன. இது குறித்து அப்பகுதி மக்கள் காரமடை நகராட்சிக்கு புகார் மனு அளித்தனர்.

இதையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால் ஏற்கனவே இருந்த தார் சாலையை அப்படியே விட்டுவிட்டு, அதன் மேலே மீண்டும் தார் சாலை அமைக்கும் பணிகளை ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டனர். மேலும் சாலை முழுவதுமாக போடப்படாமல் பேட்ச் ஒர்க் மட்டுமே செய்யப்பட்டது.அதுவும் தரமில்லாததால், 10 நாட்களில் பேட்ச் ஒர்க் செய்யப்பட்ட பகுதிகளில் சாலைகள் மீண்டும் சேதம் அடைய துவங்கியுள்ளது. இதனால் அப்பகுதி அதிருப்தியடைந்துள்ளனர்.
தரமற்ற பேட்ச் ஒர்க் செய்தவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து காரமடை நகராட்சி கமிஷனர் மதுமிதா கூறுகையில், ”தார் சாலை முழுவதுமாக அமைக்கப்படும். அதற்கான முதற்கட்ட பணிகளுக்காக தான் பேட்ச் ஒர்க் செய்யப்பட்டுள்ளது. மக்களிடம் தவறான தகவல் பரப்படுகிறது,” என்றார்.
Leave a Reply